4 பேரும் நரபலி சாப்பிடுபவர்கள்.. குடும்பத்தினரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்
வாஷிங்டன்: தனது குடும்பத்தினர் நரமாமிசம் சாப்பிடுபவர்கள் என்பதால் அவர்களை கொன்றதாக அமெரிக்காவை சேர்ந்த 18 வயது இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நாஷ் என்கிற சிறிய நகரை சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த குடும்பத்தினரை கொன்றதாக கைது செய்யப்பட்டார். அவர் பெயர் சீசர் ஒலால்டே.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அங்கிருந்த சீசர் அவருடைய வீட்டில் பலர் இறந்து கிடப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதையடுத்து சந்தேகத்தின் பெயரில் அவரை போலீஸார் கைது செய்தனர். சீசரின் பெற்றோர் ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, அவருடைய சகோதரி லிஸ்பெட் ஒலால்டே, தம்பி ஆலிவர் ஒலால்டே ஆகியோரின் உடல்கள் இருந்தன.
இவர்களுடைய உடல்கள் பாத்ரூமில் இருந்து மீட்கப்பட்டது இவர்கள் உடலில் துப்பாக்கி குண்டு துளைத்த காயமும் இருந்தது. இதனால் அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இழுத்து செல்லப்பட்டு பாத்ரூமில் விடப்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். இந்த நிலையில் விசாரணையில் தனது குடும்பத்தினர் நரமாமிசம் உண்பவர்கள், அவர்கள் தன்னை சாப்பிட திட்டமிட்டதால் அவர்களை நான் கொன்றேன் என தெரிவித்திருந்தார்.
அந்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கவும் போலீஸார் திட்டமிட்டு வருகிறார்கள். அண்மைக்காலமாக அமெரிக்காவில் கொத்து கொத்தாக நிறைய பேர் கொலை செய்யப்படுகிறார்கள். அதிலும் இந்த ஆண்டு எதிர்பாராத வகையில் எண்ணிக்கை கூடியுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications