வேதனை அளிக்கிறது..போனை கீழே வைத்து விடுகிறேன்.. ஆனந்த் மகிந்திராவை உலுக்கிய அந்த கார்டூன்
வாஷிங்டன்: செல்போன் பயன்பாடு அதிகரித்த பிறகான காலத்தில், முதியோர்களின் நிலை இப்படித்தான் இருக்கும் என்ற கருத்தில் வரையப்பட்ட கார்ட்டூன் படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்போன் பயன்பாட்டை குறைக்கப் போவதாக பதிவிட்டு இருக்கிறார்.
இந்தியாவின் மிகவும் பிரபலமான தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. மகேந்திரா குழுமங்களின் தலைவரான ஆனந்த் மகிந்திராவுக்கு சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம்.
அந்த அளவுக்கு படு ஆக்டிவாக ட்விட்டரில் ஆனந்த் மகிந்திரா பதிவுகளை போட்டு வருகிறார். சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்களை கொண்டுள்ள ஆனந்த் மகிந்திரா.

கார்டூனை வைத்து ஆனந்த் மகிந்திரா ட்விட்
ஆனந்த் மகிந்திரா ட்விட் பக்கத்தில் தனக்கு கிடைக்கும் சுவாரசியமான தகவல்கள், துணுக்குகள், தன்னம்பிக்கையூட்டும் நபர்களின் கதைகள், வீடியோக்களை அடிக்கடி வெளியிடுவார். இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும்பாலும் ட்ரெண்ட் ஹிட் அடித்து விடும். சுவாரசியமான வீடியோக்கள் மட்டும் இன்றி சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்தும் ஆனந்த் மகிந்திரா அவ்வப்போது தனது ட்விட்டர்களில் பதிவிடுவார். அந்த வகையில், கடந்த 2012 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட Bizarro Comics- வை கார்டூனை ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

வேதனையை தரும் கார்டூன் இது
இந்த கார்டூனில் முதியோர் இல்லத்தில் இருக்கும் வயதானவர்கள், கழுத்து வளைந்து, உள்ளங்கையை விரித்தபடி அமர்ந்து இருக்கும் கார்டூன்கள் இடம் பெற்று இருந்தன. செல்போன்களை பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் காலத்திற்கு பிறகான உலகம் இப்படித்தான் இருக்கும் என்ற பொருளுடன் இந்த கார்டூன் வரையப்பட்டு இருந்தது. இதை தனது ட்விட்டரில் பகிர்ந்த ஆனந்த் மகிந்திரா, உண்மையிலையே வேதனையை தரும் கார்டூன் இது. ஆனால், போனை கீழே வைத்துவிடும் முடிவுக்கு என்னை இந்த கார்டூன் ஆக்கிவிட்டது. (இந்த ட்விட்டிற்கு பிறகு). எனது கழுத்தையும் தலையும் நேராக வைத்து ஞாயிற்றுக்கிழமையை கழிக்க உறுதியாக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

நெட்டிசன்கள் கருத்து
நெட்டிசன்கள் பலரும் இந்த பதிவுக்கு கீழே , செல்போனுக்கு அடிமை ஆகும் சூழலை நோக்கித்தான் செல்கிறோம் என்று பதிவிட்டு உள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், இது உண்மைதான். கழுத்து வலி, தலைவலியுடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அதிகப்படியாக செல்போனில் வீடியோக்கள், மெசேஜ்கள் செய்வதுதான். குறிப்பாக கொரோனாவிற்கு பிறகு இது அதிகரித்துள்ளது.செல்போனுக்காக நாம் செலவிடும் நேரத்தை ஒழுங்குபடுத்துவதற்கான காலம் இதுவாகும். உங்கள் கருத்துடன் முழுமையாக நான் ஒத்துப்பொகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்காலத்தை சரியாக கணித்து இருக்கிறார்கள்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்த கார்டூனை உன்னிப்பாக பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு விஷயம் புரிய வரும். இந்த கார்டூன் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்டது. எதிர்காலத்தை மிகச்சரியாக கணித்து இருக்கிறார்கள். அனைவரும் செல்போன் பயன்பாட்டை குறைத்து மக்களுடன் நேரடியாக பேசி நேரத்தை செலவிடுவார்கள் என நான் நம்புகிறேன். இதன் முலம் ஆரோக்கியமான வாழ்க்கையையும் மன அழுத்தம் இன்றியும் இருக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.

முடிவில்லாத ஒன்றாக தொடர்ந்து கொண்டிருக்கிறது
இன்னொரு நெட்டிசன் வெளியிட்டு இருக்கும் பதிவில், "டிஜிட்டல் மற்றும் போன் பயன்பாட்டை குறைப்பது அவசியம் ஆகியிருக்கிறது. போன்கள் இல்லையென்றால் வாழ்க்கை அழகாக இருக்கும்" என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவுக்கு கீழே ஒரு நெட்டிசன் டிவிட்டில், சர்.. நீங்கள் இந்த புகைப்படத்தை பதிவிடுவதற்காக உங்கள் செல்போனை எடுத்து இருக்கிறீர்கள்.... நான், கமெண்ட் போடுவதற்காக எடுத்து இருக்கிறேன். எனவே, இது முடிவில்லாத ஒன்றாக சென்று தொடர்ந்து கொண்டிருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications