ஒரு சிஇஓ என்றும் பாராமல்.. பராக் அகர்வாலை காவலர்கள் மூலம் வெளியேற்றிய மஸ்க்! அதிர வைக்கும் தகவல்
வாஷிங்டன்: ட்விட்டர் சமூக வலைத்தளத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில், அன்று தலைமை அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்த டிஜிட்டல் உலகத்தில் சமூக வலைத்தளங்கள் தான் மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று பல்வேறு சமூக வலைத்தளங்கள் உள்ளன.
இருந்த போதிலும், உலகின் அனைத்து டாப் பிரபலங்களின் தேர்வாக ட்விட்டர் தான் இருக்கிறது. 140 வார்த்தைகளில் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதே ட்விட்டர் ஹிட் அடிக்க முக்கிய காரணம்.

எலான் மஸ்க்
உலகெங்கும் பல கோடி பேர் ட்விட்டரை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போதிலும், கடந்த சில ஆண்டுகளாகவே ட்விட்டர் வருமானம் பெரியளவில் அதிகரிக்கவில்லை. மற்ற சமூக வலைத்தளங்களுடன் ஒப்பிடுகையில் ட்வட்டர் வளர்ச்சி பெரிதாக இல்லை. இந்தச் சூழலில் தான், யாருமே எதிர்பார்க்காத வகையில் ட்விட்டர் தளத்தை வாங்க உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் போர்ட் உறுப்பினர்களும் இதற்குப் பச்சைக் கொடி காட்டினர்.

வாங்கினார்
இருப்பினும், திடீரென ட்விட்டரில் போலிக் கணக்குகள் தொடர்பான தகவல்கள் துல்லியமாக இல்லை என்பதால் ட்விட்டர் தளத்தை வாங்கப் போவது இல்லை என்றார் மஸ்க். இதனால் கடும் அதிருப்தியடைந்த ட்விட்டர் போர்ட், இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளதாக எச்சரித்தனர். இதால் மீண்டும் தனது முடிவை மாற்றிய எலான் எஸ்க், 44 மில்லியன் டாலருக்கு ட்விட்டரை வாங்கினார்.

அதிரடி மாற்றம்
ட்விட்டர் தளத்தை வாங்கிய உடன் அவர் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். எலான் மஸ்கும் தனது ட்விட்டரில், "ஒரு வழியாகப் பறவை இப்போது விடுவிக்கப்பட்டது" என்று பதிவிட்டு இருந்தார். ட்விட்டர் தளத்தில் லோகோ பறவை தான் என்பது குறிப்பிடத்தக்கது. ட்விட்டர் தளத்தில் டிரம்ப் உள்ளிட்ட பலருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதையெல்லாம் மஸ்க் வாபஸ் பெறுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நீக்கம்
எலான் மஸ்கிற்கும் ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வாலுக்கும் இடையே மோதல் இருப்பது அனைவருக்கும் தெரியும். எனவே, மஸ்க் ட்விட்டரை வாங்கிய உடன் நிச்சயம் சிஇஓ உள்ளிட்ட டாப் அதிகாரிகளை அவர் பதவியில் இருந்து நீக்குவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல எலான் மஸ்க் முதல் நாளே பராக் அகர்வாலை வேலையைவிட்டுத் தூக்கினார். அவர் மட்டுமின்றி டாப் டீமை அப்படியே ஒட்டுமொத்தமாக அவர் நீக்கினார்.

பராக் அகர்வால்
இதனிடையே அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. மஸ்க் வந்தும் பராக் அகர்வால் நீக்கப்படுவது உறுதி என அனைவருக்கும் தெரியும். பராக் அகர்வாலும் கூடத் தான் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்து இருந்தார். அதற்கேற்ப நேற்று சம்பவங்கள் நடந்தாலும் கூட மற்றொரு பகீர் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பராக் அகர்வாலை அன்றைய தினமே பாதுகாப்புப் படையினர் வெளியே அனுப்பி உள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகள்
மஸ்க் பதவியேற்ற தினம் பராக் அகர்வால் தலைமை அலுவலகத்தில் தான் இருந்து உள்ளார். அகர்வாலை வேலையைவிட்டுத் தூக்க மஸ்க் உத்தரவிட்டதும், திடீரென பராக் அகர்வால் அலுவலகத்திற்குப் பாதுகாப்பு அதிகாரிகள் வந்துள்ளனர். வேலை செய்யும் இடத்தை உடனடியாக காலி செய்யச் சொன்ன அவர்கள், ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்கு வெளியே வரை பராக் அகர்வாலை அழைத்து வந்துள்ளனர்.

விமர்சனம்
எந்த நிறுவனத்திற்காக இத்தனை ஆண்டுகள் உழைத்தாரோ அதே அலுவலகத்தில் இருந்து ஏதோ குற்றச்செய்தவர் போல அழைத்து வரப்பட்டு உள்ளார். அவர் மட்டுமின்றி தலைமை நிதி அதிகாரி நெட் செகல் என்பவரும் இதேபோல பாதுகாப்பு அதிகாரிகள் சூழ வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளார். வரும் காலத்தில் ட்விட்டரில் மேலும் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை ரத்தகளறி! தங்கம் - பங்குகள் வீழ்ச்சி, எண்ணெய் உயர்வு? -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி -
இஸ்லாமாபாத் டூ இஸ்ரேல்! இடையே வந்த அந்த ஒரு போன் கால்! ஈரான்-அமெரிக்கா பேச்சுவார்த்தை பெயிலானது ஏன்? -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications