ஷாக்.. வானில் பறந்தபோதே 2 போர் விமானங்கள் பயங்கர மோதல்.. சல்லி சல்லியா நொறுங்கி தீப்பிடித்தது
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த விமான கண்காட்சியில் நடுவானில் பறந்தபோது 2 போர் விமானங்கள் ஒன்றொடொன்று பயங்கரமாக மோதி தீப்பிடித்து சல்லி சல்லியாக நொறுங்கி தீப்பிழம்பாய் தரையில் விழுந்ததது. இதுதொடர்பான பதைபதைக்கும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
அமெரிக்கா டெக்சாஸில் டல்லாஸ் எக்ஸிக்யூட்டிவ் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் விமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி விமான கண்காட்சியில் பலரக விமானங்கள் பங்கேற்றன. இந்நிலையில் நேற்று விமான நிலையத்தில் விமான கண்காட்சி துவங்கி நடைபெற்று வந்தது.

சாகசங்கள் செய்த விமானம்
விமான நிலையத்தின் மேல் வானில் விமானங்கள் சாகசங்கள் செய்தபடி பறந்தன. விமானங்களை சாமர்த்தியமாக செலுத்தி விமானிகள் தங்களின் திறமையை வெளிக்காட்டி வந்தனர். இருவிமானங்கள் ஒரே நேர்க்கோட்டில் சென்றது. விமானங்கள் அருகருகே பறந்து சென்றன. ஒன்றொடொன்று மோதுவது போல் செல்லும் விமானங்கள் இறுதிக்கட்டத்தில் விலகி சென்றன. இது மக்களை பரவசப்படுத்தியது.

வானில் விமானங்கள் மோதல்
இந்நிலையில் தான் விமான கண்காட்சியில் குண்டுவீச்சுக்கு பயன்படுத்தப்படும் போயிங் பி-17 ரக விமானம் பங்கேற்று இருந்தது. இந்த விமானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. கண்காட்சியின்போது இந்த விமானமும், பெல் பி 63 கிங்கோப்ரா ரக சிறிய விமானமும் கண் இமைக்கும் நேரத்தில் ஒன்றொடொன்று பயங்கரமாக மோதிக்கொண்டது. இதையடுத்து அடுத்த வினாடியில் விமானங்கள் தீப்பிடித்து தீப்பிளம்பாக வானில் இருந்து தரையில் விழுந்தன.

வெளியான ஷாக் வீடியோ
இதற்கிடையே போயிங் பி-17 ரக விமானம், சிறிய ரக விமானம் ஒன்றொடொன்று மோதிக்கொண்டதன் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் 2 விமானங்களும் தரையில் இருந்து சிறிய தூரம் பறக்கின்றன. இருவேறு திசைகளில் இருந்து வந்த விமானங்களில் திடீரென்று ஒரே நேர்க்கோட்டில் பறந்தபோது பயங்கரமாக மோதிக்கொண்டன. இது நெஞ்சை பதைபதைக்க செய்கிறது.

தீவிர விசாரணை
இதுதொடர்பாக தேசிய விமான போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை துவங்கி உள்ளது. இந்த விபத்தில் 2 விமானங்களில் இருந்த விமானிகளின் நிலை என்ன என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்பட்டவில்லை என்று அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் கூறியுள்ளது.

விமானங்களின் சிறப்பு என்ன?
தற்போது விபத்துக்கு உள்ளான போயிங் பி17 ரகவிமானம் 2ம் உலகப்போரில் ஜெர்மனிக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. குண்டுவீச இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது. ஜெர்மனிக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி பெற இந்த விமானம் கைக்கொடுத்துள்ளது. அதேபோல் சிறிய விமானமான பெல் பி63 கிங்கோப்ராவும் ஒரு போர் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications