Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்து திருப்பங்கள்.. ரஷ்ய நிதி நிறுவனங்கள் மீது பொருளாதார தடை விதித்தார் பிடன்.. என்னாகும்?

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தார் அமெரிக்க அதிபர் பிடன்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்... முந்தைய தங்கள் மீதான மோசமான நடவடிக்கைகளுக்காக இந்த தடையை அறிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நேட்டோவின் நட்பு நாடுகள் பட்டியலில் உக்ரைன் இடம்பிடித்துள்ளது... இதனால் சர்வதேச பாதுகாப்பு கிடைக்கும்.. அத்துடன் ஐரோப்பிய கூட்டமைப்பில் சேர்ந்துவிடலாம் என்பதால், உக்ரைன் இவ்வாறு இடம்பிடித்துள்ளது.

ஆனால் இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. காரணம், உக்ரைன் நேட்டோவில் இணைந்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல், உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல ரூபங்களில் ஆபத்து வந்துவிடும் என்று ரஷ்யா கருதுகிறது.

வல்லரசுகள்

வல்லரசுகள்

இதுதான் இப்போது பஞ்சாயத்து ஆகியுள்ளது.. சீனாவுக்கு அண்டை நாடாக இருப்பது இந்தியாவுக்கு எப்படி தலைவலியோ, அதுமாதிரிதான், ரஷ்யாவுக்கு பக்கத்து நாடாக இருக்கும் உக்ரேனுக்கும் மிகப்பெரிய தலைவலி உருவாகி உள்ளது.. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்கிறதா? என்பதே மிகப்பெரிய கேள்வியாகவும் எதிர்பார்ப்பாகவும் அச்சமாகவும் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.. எனினும் அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் ரஷ்யாவை திட்டி தீர்த்து வருகின்றன.

தூதரங்கள்

தூதரங்கள்

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் போர்ச்சூழல் காரணமாக, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உக்ரேனில் வசித்துவரும் தங்கள் தங்கள் நாட்டு மக்களை உடனே வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றன... மேலும் அந்தந்த நாடுகள், உக்ரேனிலுள்ள தங்களது நாட்டு தூதரகங்களையும் மூடிவருகின்றன... அப்படித்தான் இந்தியாவும், அங்கிருப்பவர்களை வெளியேறிவரச் சொல்லி விட்டது.

 ஆபத்து சூழலாம்

ஆபத்து சூழலாம்

ரஷ்யா - உக்ரேன் நாட்டின் எல்லையில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்கள் குவிந்து கிடக்கிறார்களாம்.. அதனால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து சூழலாம் என்ற நிலைமைதான் உள்ளது.. இதற்குதான் அமெரிக்க ரஷ்யாவை கண்டித்தும், எச்சரித்தும் வருகிறது.. அமெரிக்கா மட்டுமில்லை, எல்லா ஐரோப்பிய நாடுகளுமே எச்சரித்தும் ரஷ்யா தன் பிடிவாதத்தை தளர்த்தி கொள்ளவில்லை.

 கொந்தளிப்பு

கொந்தளிப்பு

இந்நிலையில், கிழக்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் என்ற பகுதிகளை தனி நகரங்களாக ரஷ்யா திடுதிப்பென்று நேற்றைய தினம் அங்கீகரித்துவிட்டது.. மேலும், அந்த பகுதிகளில் படைகளையும் குவித்துவிட்டது.. ஏற்கனவே கொந்தளித்து போயிருக்கும் உலக நாடுகள் ரஷ்யாவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன... இப்படிப்பட்ட சூழலில் தங்களின் முந்தைய நடவடிக்கைகளுக்காக ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடின் அறிவித்துள்ளார்.

 வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "சர்வதேச சட்டத்தை ரஷ்யா பகிரங்கமாகவே மீறியிருக்கிறது.. உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம் இது என்றே தெரிகிறது.. ரஷ்யாவின் 2 நிதி நிறுவனங்களான விஇபி, ரஷ்யாவின் ராணுவ வங்கி ஆகியவை இப்போது பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்கின்றன.. உக்ரேன் பற்றிய புதினின் கூற்றுகளால் நாங்கள் யாரும் ஏமாற போவதில்லை.. இப்படியே புடின் தன் போக்கை தொடர்ந்தால் மேலும் பொருளாதார தடைகள் விதிக்கக் கூடும்.

 அமெரிக்க படைகள்

அமெரிக்க படைகள்

ஆனால், உக்ரேனுக்கு அதிகளவில் தற்காப்புக்கான உதவிகளை அமெரிக்கா கண்டிப்பாக வழங்கும்... நேட்டோ அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள பால்டிக் நட்பு நாடுகளுக்கு அமெரிக்க படைகளை கூடுதலாக அனுப்பி வைக்கப்படும்" என்றார். பலமுள்ள பகுதிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பதற்கான ஒரு காரணத்தை புடின் உருவாக்கி கொண்டிருக்கிறார்.. அங்கு தாக்குதல் நடத்த இன்னொரு காரணத்தை உருவாக்கி கொண்டிருக்கிறார்.. இதெல்லாம் உக்ரன் மீதான ரஷ்ய படையெடுப்பின் ஆரம்பம்தான்" என்றார்.

ரஷ்யா

ரஷ்யா

இதனிடையே, உக்ரேனுக்குள் ரஷ்ய படைகள் நுழைய உத்தரவிட்ட அதிபர் புதினுக்கு கடும் கண்டனங்களை உலக நாடுகள் பதிவு செய்து வருகின்றன.. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இதை பற்றி சொல்லும்போது, உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டை ரஷ்யா மீறியுள்ளது... புதின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது.. இதை நாங்கள் கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சொல்லும்போது, ரஷ்யாவின் நடவடிக்கைகளை ஏற்க முடியாது.. மற்ற நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும்பட்சத்தில், நாங்கள் அவர்களுடன் கண்டிப்பாக இணைந்திருப்போம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+