எங்க முதலாளி.. தங்க முதலாளி! 540 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கிய சிஇஓ! ஒவ்வொருவருக்கும் ரூ.4 கோடி போனஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபலத் தனியார் நிறுவனத்தின் சிஇஓ ஒருவர், தனது நிறுவனத்தை விற்றபோது கிடைத்த தொகையில் பெரும் தொகையை ஊழியர்களுக்கு போனஸாக வழங்கியுள்ளார். அந்த ஊழியர்களிடம் நிறுவனத்தின் பங்குகள் இல்லாத போதிலும், தன்னுடன் பயணித்ததற்காக இதுபோல போனஸ் கொடுத்துள்ளார்.
எப்போதும் ஒரு நிறுவனத்திற்குத் தலைமை தாங்குவோர் தனக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். அவர்கள் ஊழியர்களின் நலன்களில் பெரியளவில் அக்கறை காட்ட மாட்டார்கள். ஆனால், அனைத்து முதலாளிகளும் அப்படி இருப்பார்கள் என சொல்ல முடியாது. அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் இப்போது நடந்துள்ளது.

அமெரிக்க சிஇஓ
அங்கு இயங்கி வரும் ஃபைப்ரெபாண்ட் என்ற நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் கிரஹாம் வாக்கர்.. 46 வயதான இவர், தன்னிடம் வேலை செய்து வந்த 700 ஊழியர்களுக்குச் சுமார் ரூ.2,155 கோடி ($240 மில்லியன்) போனஸாக கொடுத்துள்ளார்.
மின் கருவிகள் சார்ந்த பொருட்களை இந்த நிறுவனம் தயாரித்து வந்தது. இவர்கள் பிஸ்னஸ் மிக சிறப்பாக இருந்ததால் ஈடன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் ஃபைப்ரெபாண்ட் கம்பெனியை வாங்க ஆர்வம் காட்டியது. அதன்படி சுமார் சுமார் ரூ.15,265 கோடிக்கு ($1.7 பில்லியன்) விற்கப்பட்டது. இதன் மூலம் தனக்குக் கிடைத்த லாபத்தில் ஒரு பகுதியைத் தான் கிரஹாம் தனது ஊழியர்களுக்கு போனஸாக பிரித்துக் கொடுத்துள்ளார்.
போனஸ் கொடுத்தார்
அந்த ஊழியர்கள் யாருக்கும் ஃபைப்ரெபாண்ட் நிறுவனத்தில் பங்குகள் இல்லை என்ற போதிலும், கிரஹாம் அவர்களுக்கான பணத்தைப் பிரித்துக் கொடுக்க விரும்பியுள்ளார். தனது நிறுவனத்தை விற்கும்போது அதில் கிடைக்கும் வருவாயில் 15 சதவீதத்தை ஊழியர்களுக்காக ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு யார் ஒப்புக் கொள்கிறார்களோ.. அவர்களுக்கு மட்டுமே தனது நிறுவனத்தை விற்பேன் என்பதில் கிரஹாம் உறுதியாக இருந்துள்ளார்..
நம்பவே முடியல
அதன்படி கடந்த ஜூன் மாதம் தனது நிறுவனத்தை விற்று, அதில் கிடைத்த பணத்தை ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பணியாளருக்கும் சராசரியாக $443,000 என ஐந்து ஆண்டுகளுக்குப் பிரித்து இந்த போனஸ் தொகை வழங்கப்பட்டது. சாதாரண ஊழியராகப் பணியாற்றிய தங்களுக்கு போனஸ் வந்ததைப் பல ஊழியர்களால் நம்பவே முடியவில்லை. முதலில் இந்த குறித்த அறிவிப்பு வந்தபோது, பல ஊழியர்கள் இதைச் சும்மா ஜோக் என்றே நினைத்தனர். ஆனால், போனஸ் தொகை வந்தபோது அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.
இந்த போனஸ் தொகையைக் கொண்டு ஊழியர்கள் பலரும் தங்கள் கடன்களை அடைத்துள்ளனர்.. பலர் கார்களை வாங்கியுள்ளனர்.. மேலும், பலர் கல்லூரிப் படிப்புக்கான கட்டணத்தைச் செலுத்தினர். சிலர் ஓய்வூதியத்திற்காக அந்தத் தொகையைச் சேமித்து வைத்துள்ளனர்.
மகிழ்ச்சி
இது தொடர்பாக ஃபைப்ரெபாண்ட் ஊழியரான லெசியா கீ கூறுகையில், "இந்த போனஸை நான் எதிர்பார்க்கவே இல்லை. நிச்சயம் அவருக்கு நன்றியுடன் இருப்பேன்" என்றார். 1995இல் தனது 21 வயதில் இந்த நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த கீ, படிப்படியாக உயர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் 18 பேர் கொண்ட குழுவை வழிநடத்தினார். இவரைப் போல அந்த நிறுவனத்தில் வேலை செய்த 700+ ஊழியர்களுக்குப் பரிசைக் கொடுத்துள்ளார்
1982இல் வாக்கரின் தந்தை கிளாட் வாக்கர் மற்றும் 11 பேர் இணைந்து இந்த ஃபைப்ரெபாண்ட் நிறுவனத்தைத் தொடங்கினர். 1998இல் தொழிற்சாலை மாபெரும் விபத்து ஏற்பட்டது. அதேபோல டாட்-காம் நெருக்கடி எனப் பல சவால்களைச் சந்தித்தனர். இந்த இக்கட்டான சூழல்களிலும் தங்களுடன் இருந்தவர்களுக்கே வாக்கார் போனஸை கொடுத்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications