சும்மா எடுத்த ஒரு DNA டெஸ்ட்... 40 வருஷம் கழித்து அலறிய பெண்.. விஷயம் அம்பலமானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: வெள்ளை அங்கி மாட்டி, நோயாளிகளின் கவலை தீர்க்கும் தெய்வங்களாக பார்க்கப்படுகிறார்கள் டாக்டர்கள்.. அப்படியிருக்கும்போது ஒருசில டாக்டர்கள் கொடூரம் இருக்கிறதே, கேட்கும்போதே நெஞ்சம் நடுங்க வைக்கிறது! அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் வெளிச்சத்துக்கு வந்து, உலகையே உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கிறது. அப்படி என்னதான் நடந்தது?

1980ம் ஆண்டு நடந்த சம்பவம் இது.. அந்த பெண்ணின் பெயரை மேரி எலன் லுகேசிச். இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.. இதனால் கண்ணீருடன் தவித்து வந்தார் மேரி..

DNA Test Fertility Doctor US News DNA Shock Fertility Scam

அமெரிக்கா டாக்டர்

ஒருநாள் தன்னுடைய கணவரை அழைத்துக்கொண்டு, மில்வாக்கியில் உள்ள பிரபல மகப்பேறு நிபுணரான டாக்டர் ஃபிரடெரிக் டெட்மேன் என்பவரை சந்தித்து, தன் பிரச்சனையை சொன்னார்..

உடனே டாக்டர் டெட்மேன், "கவலைப்படாதீங்க அம்மா.. அடையாளம் தெரியாத, ஆரோக்கியமான ஒரு மருத்துவக் கல்லூரி மாணவரின் விந்தணுவை வைத்து உங்களுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்து தர்றேன்" என்று வாக்கு தந்திருக்கிறார்.. மேரியும் இதை நம்பி சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டார்.. 1983-ல் அழகான ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.. அந்தப் பையனுக்கு ஜோசப் லாட்கே ஹைடர் என்று பெயரிட்டு, மேரி தம்பதியினர் பாசத்தை கொட்டி வளர்த்து வந்தார்கள்.

40 வருடம் கழித்து டிஎன்ஏ ரிசல்ட்

இப்படியே 40 வருடங்கள் ஓடிவிட்டன! எல்லாம் சுமுகமாக போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான், 2024-ல் ஜோசப் சும்மா வேடிக்கையாக ஒரு DNA பரிசோதனை டெஸ்ட் எடுக்க போனார்.. ஆனால், அந்த ஒரு டெஸ்ட் முடிவு, அவர் வாழ்க்கையையே தலைகீழாக திருப்பிப் போடும் என்று அவர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்!

டிஎன்ஏ ரிசல்ட்டில், தமக்கு தெரியாத பல அரை-சகோதரர்கள் அதாவது half-siblings இருப்பதை பார்த்து ஜோசப் வெலவெலத்து போனார்.. யார் இவர்கள்? என்று மரபணு வழியைத் தோண்டித் துருவி ஆராய்ந்தபோதுதான் அந்த பகீர் உண்மை தெரியவந்தது.. அதாவது மருத்துவ கல்லூரி மாணவரின் விந்தணுவை செலுத்துவதாகச் சொல்லிவிட்டு, அந்த டாக்டர் டெட்மேன், தன்னுடைய சொந்த விந்தணுவையே பயன்படுத்தி மேரியைக் கர்ப்பமாக்கியிருக்கிறார்..

அலறிய மேரி

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோசப், தன்னுடைய அடையாளமே பொய்யாகிவிட்டதே,.. அதைவிட, ஒரு தாயாக வேண்டும் என்ற ஒரே ஆசையில் வந்த என் அம்மாவை இந்த டாக்டர் இப்படி ஏமாற்றிவிட்டாரே..." என்று நிலைகுலைந்து கதறினார்.. இந்த விஷயத்தை மேரியிடமும் சொன்னார் ஜோசப்.

சும்மா விடுவாரா மேரி? உடனே மகன் ஜோசப்பை அழைத்து கொண்டு, மில்வாக்கி கவுண்டி நீதிமன்றத்தில் டாக்டர் ஃபிரடெரிக் டெட்மேன் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளார்..

"எங்களின் சம்மதம் இல்லாமல், நம்பிக்கை துரோகம் செய்த அந்த டாக்டரிடம் இருந்து உரிய இழப்பீடு வேண்டும்" என்று தாயும், மகனும் நீதிமன்றப் படிகளை ஏறியுள்ளனர்.

ஆனால், இப்போது 91 வயதாகும் டாக்டர் ஃபிரடெரிக் டெட்மேன் தரப்போ, "50 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததா சொல்றீங்க... எனக்கு யாரையும் ஞாபகம் இல்லை, இதுக்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை!" என்று அசால்ட்டாக சொல்கிறாராம்.. இப்போது இதுதொடர்பான வழக்குதான் நடந்து கொண்டிருக்கிறது.

கோர்ட் படியேறிய தாய், மகன்

மற்றொருபக்கம் இதுதொடர்பான விசாரணையும் நடக்கிறது.. அந்த விசாரணையில் டெட்மேனுக்கு விஸ்கான்சின் மட்டுமில்லாமல் அரிசோனா மாநிலத்திலும் மருத்துவ உரிமம் இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல.. ஜோசப்புக்கு உருவான அரை-சகோதரர்களை வைத்துப் பார்க்கும்போது, இன்னும் பல பெண்களை இந்த டாக்டர் இதேபோல ஏமாற்றியிருக்கலாம் என்று வழக்கறிஞர்கள் சந்தேகிக்கிறார்கள்.

எனவே, "பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் தைரியமாக முன்வாருங்கள்!" என்று ஜோசப் அழைப்பு விடுத்துள்ளார்.. இந்த அறிவிப்பை கேட்டதுமே டெட்மேனின் பழைய நோயாளிகள் பலரும் இப்போது தங்களின் கசப்பான அனுபவங்களைப் ஷேர் செய்ய ஆரம்பித்துள்ளார்களாம்.

மருத்துவ உலகில் அரங்கேறிய இந்த DNA பித்தலாட்டம் அமெரிக்காவை மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. நீதிமன்ற விசாரணையில் அந்த 91 வயது மருத்துவருக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+