வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் உள்பட 5 இந்தியர்கள் வெற்றி

அமெரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் 2 தமிழர்கள் உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் எம்பிக்களாக வெற்றி பெற்றுள்ளனர். செனட் உறுப்பிராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் பிரதிநிதிகள் இரண்டு தமிழர்கள் உள்பட இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேர் வெற்றி பெற்றுள்ளனர். செனட் உறுப்பினராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நீரஜ் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த அதிபர் யார் என்பதற்கான முக்கியமான தேர்தலில் வாக்குப் பதிவு நேற்று நடந்தது. இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்போடு நடந்துவருகிறது. இப்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் 238 இடங்களிலும் தற்போதைய அதிபரும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்டு டிரம்ப் 213 இடங்களில் முன்னிலையில் உள்ளனர்.

US Election 2020: Pramila Jayapal wins Congressional seat for third consecutive term

நான்கு இந்தியர்கள் எம்பிக்களாக வெற்றி

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தொடர்ச்சியாக 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்திய அமெரிக்க பெண்ணான பிரமீளா ஜெயபால். சென்னையில் பிறந்த பிரமீளா ஜெயபால் ,55 ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர், இவர் குடியரசுக் கட்சியின் கிரெய்க் கெல்லர் என்பவரை விட 70 சதவிகித வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

வாஷிங்டன் மாநில 7வது காங்கிரஸ் மாவட்டத்தில் இவர் வெற்றி பெற்றார். இதுவரை 80% வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பிரமீள ஜெயபால் 344,541 வாக்குகல் பெற்றுள்ளார், குடியரசுக் கட்சி வேட்பாளர் 61,940 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இவர் 2016ஆம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண் ஆவார்.

US Election 2020: Pramila Jayapal wins Congressional seat for third consecutive term

இல்லினாய்ஸ் மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அமெரிக்க வாழ் தமிழர் ராஜா கிருஷ்ணமூர்த்தி மகத்தான வெற்றியைப் பெற்றார். இவர் இப்போது வென்றிருப்பதன் மூலம் 3 வது முறை எம்.பி ஆகிறார். இதே போல ரோகண்ணா, அபி பெரா ஆகிய அமெரிக்க வாழ் இந்தியர்களும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

செனட் உறுப்பினராக நீரஜ் ஆண்டனி வெற்றி

இதனிடையே ஓஹியோ மாநில செனட் சபைக்கு போட்டியிட்ட முதல் இந்திய-அமெரிக்கரான நீரஜ் ஜெ. ஆண்டனி வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 29வயதாகிறது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நிராஜ் ஓஹியோ மாநில செனட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கர் என்ற வரலாற்றை உருவாக்கியுள்ளார். தற்போது மாநில பிரதிநிதியாக இருக்கும் நீரஜ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் மார்க் ஃபோகலை தோற்கடித்து, ஓஹியோ செனட்டின் 6 வது மாவட்டத்திற்கான மாநில செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

English summary
Indian-American Congresswoman Pramila Jayapal has been re elected for the US House of Representatives for the third consecutive term.Chennai-born Jayapal, 55, from the Democratic Party, defeated Republican Craig Keller.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X