Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அலறவிட்ட அமெரிக்க சிஐஏ ரிப்போர்ட்! புதினை சுற்றி வளைத்த டிரோன்கள்? உண்மையில் நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் தொடர்கிறது. ரஷ்ய அதிபர் புதினை கொல்லத் திட்டமிட்டு உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியிருந்தது. தாக்குதல் தொடர்பான வீடியோவையும் ரஷ்யா வெளியிட்டிருந்தது. இதற்கிடையே இது தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே உக்ரைன் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட போரை நிறுத்தும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இருப்பினும், இதுவரை மோதல் முடிவுக்கு வரவில்லை. இந்தச் சூழலில் தான் ரஷ்யத் தலைநகரில் உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.

US Intelligence Rejects Russia s Claim of Ukrainian Drone Plot Targeting President Putin residence

புதினை கொல்லச் சதி?

போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடக்கும் நிலையில், இந்த தாக்குதல் நிலைமையை மோசமாக்கியுள்ளது. புதினை கொல்லவே உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியது. தாக்குதல் தொடர்பான வீடியோவையும் ரஷ்யா வெளியிட்டதால் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையே இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.

அதாவது உக்ரைன் இந்த தாக்குதலில் ரஷ்ய அதிபர் புதின் அல்லது அவருடைய வசிப்பிடங்கள் எதையும் குறிவைக்கவில்லை என்று அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதினை படுகொலை செய்யும் முயற்சியாகவே உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷ்யா கூறி வரும் நிலையில், அதற்கு நேர்மாறான தகவலை அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளது.

ஆதாரம் இல்லை

ரஷ்ய அதிபர் புதின் மீது எந்தத் தாக்குதல் முயற்சியும் நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்று சிஏஐ ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது உக்ரைன் இந்தத் தாக்குதலை நடத்தியது உண்மை தான் என்ற போதிலும், புதினை குறிவைத்து இந்த தாக்குதலை உக்ரைன் நடத்தவில்லை என்று அமெரிக்க உளவுத் துறை கூறியுள்ளது.. அதேநேரம் சிஐஏ இந்த விவகாரம் குறித்து பகிரங்கமாகக் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

ரஷ்யாவில் அதிபர் மாளிகைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் ராணுவ இலக்குகளைக் குறிவைத்தே உக்ரைன் தாக்குதல் நடந்துள்ளது. புதினின் குடியிருப்பு அமைந்துள்ள பிரம்மாண்டப் பகுதியில் ஒரு பக்கம் இந்த ராணுவ மையம் அமைந்துள்ளது. இதைத் தான் உக்ரைன் தாக்கியுள்ளது. இந்த இடத்தில் இருந்து புதின் குடியிருப்பு வெகு தொலைவில் அமைந்துள்ளதாக அமெரிக்க உளவுத் துறை அதிகாரி சுட்டிக்காட்டினார்.

டிரம்ப் நிராகரிப்பு

புதின் குறிவைக்கப்பட்டதாகச் சொல்லும் ரஷ்யாவின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்பும் நிராகரித்துள்ளார். தனக்கு வந்த தகவலின்படி புதினை குறிவைத்து எந்தவொரு தாக்குதலையும் உக்ரைன் நடத்தவில்லை என டிரம்ப் தெரிவித்தார். அதிபர் டிரம்ப்பை சந்தித்து சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிஃப் இது தொடர்பாக விளக்கமளித்திருந்த நிலையில், டிரம்ப் இந்தக் கருத்துகளைக் கூறினார்.

உக்ரைன் சொல்வது என்ன

ரஷ்யாவின் உட்பகுதியில் சில தாக்குதல்களை நடத்தியதை உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், புதின் அல்லது அவரது வசிப்பிடத்தைக் குறிவைத்த எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என உக்ரைன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் மெல்ல உடன்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டிருந்தது. டிரம்ப் கூட போர் நிறுத்தம் வரும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நேரத்தில் நடந்த தாக்குதல் நிலைமை சிக்கலாக்குவதாகவே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+