எது.! நம்ம அண்ணாச்சி பை "சொகுசு" பொருளா? ரேட்டை கேட்டால் தலையே சுத்துதே! அமெரிக்காவில் வினோதம்
வாஷிங்டன்: நம்ம ஊர் அண்ணாச்சி கடைகளில் இதுபோன்ற பைகளைப் பார்த்திருப்போம். இதை பற்றி நாம் பெரிதாக யோசித்துக் கூட இருக்க மாட்டோம். ஆனால், அமெரிக்காவில் இதையே சொகுசு பொருள் விற்கும் சைட்டில் விற்று, ஒரு மார்கெட்டாக மாற்றிவிட்டார்கள். எது சொகுசு பொருளா என நீங்கள் கேட்பது புரிகிறது.. ஆனால், இதற்கே ஷாக் ஆக வேண்டாம்! இதன் விலை உங்கள் தலையைச் சுற்ற வைக்கும்.
நம்ம ஊரில் நீங்கள் சிட்டியை தாண்டி ஊர் பக்கம் போனால் பெரும்பாலான அண்ணாச்சி கடைகளில் நாம் இந்த டைப் பைகளை பார்த்திருப்போம். அவர்கள் மொத்தமாகக் கடைக்குச் சென்று பொருட்களை வாங்கும்போது இதுபோன்ற பைகளைத் தான் உடன் எடுத்துச் செல்வார்கள்.

அண்ணாச்சி பை
இந்த காலத்தில் சிட்டிகளில் இதுபோன்ற பைகள் பார்ப்பது குறைந்துவிட்ட போதிலும், ஊர் பக்கம் இன்னுமே இதுபோன்ற பைகளை நாம் பார்ப்போம். அதிக காலம் உழைக்க வேண்டும் என்பதால் கெட்டியான மெட்டீரியலில் தான் செய்திருப்பார்கள். மேலும், அழுக்கானாலும் தெரியக்கூடாது என்பதற்காகவே பிரவுன் கலர் யூஸ் செய்திருப்பார்கள்.
கடை வைத்திருப்பவர்களும் கூட இதை வேறு விஷயங்களுக்கு பெரும்பாலும் பயன்படுத்த மாட்டார்கள். இதன் விலையும் கூட அதிகபட்சம் ரூ.300, ரூ.400 தான் வரும். அதிலும் பெரும்பாலான பைகளை எதாவது ஒரு கம்பெனியே புரோமேஷனுக்கு இலவசமாகக் கடைக்காரர்களுக்குத் தந்துவிடுவார்கள். ஆனால், இதையே பல மடங்கு ரேட்டிற்கு விற்க முடியும் என்றால் அது அமெரிக்காவில் மட்டுமே முடியும்!
அமெரிக்காவில் வினோதம்
அமெரிக்கா என்பது நீங்கள் எதிர்பார்க்காத பல வினோதங்கள் நிறைந்த ஒரு நாடாகும். இதெல்லாம் சாத்தியமா என நினைக்கும் வினோதத்தைக் கூட அமெரிக்காவில் செய்வார்கள். சந்தோஷ் சுப்பிரமணியன் படத்தில் ஒரு வசனம் வரும்.. இந்த கருமம் புடுச்ச நகத்தை கடிச்சே துப்பிடலாம் இதுக்கு தனி காசுனு.. அதுபோல தான் அமெரிக்காவிலும் நீங்கள் சாதாரணமாகச் செய்யும் காரியத்திற்குக் கூட தனியாகக் காசை பிடுங்குவார்கள்!
இப்போது நம்ம அண்ணாச்சி பையையும் அவர்கள் மார்கெட்டிங்கில் கையில் எடுத்துவிட்டார்கள். முன்பே சொன்னது போல இது நம்ம ஊர் அண்ணாச்சி கடைகளுக்கு இலவசமாகவே கிடைக்கும். ஆனால், இதை அமெரிக்காவில் விற்கத் தொடங்கியுள்ளனர். அதுவும் சும்மா சாதாரணமாக இல்லை. சொகுசு பொருட்களை விற்கும் தளத்தில் விற்கத் தொடங்கியுள்ளனர்.
ரேட்டை பாருங்க
அமெரிக்காவில் சொகுசு பொருட்களை விற்கும் பிரபல நார்ட்ஸ்ட்ரோமில் என்ற தளத்தில் இதைப் பட்டியலிட்டுள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த பியூப்கோவால் என்ற நிறுவனம் இதை "இந்திய நினைவுப் பை" என சொல்லி விற்கிறார்கள். மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்டதாம். எல்லாம் சரி, விலையை சொல்லுப்பா என நீங்கள் கேட்பது புரிகிறது.. ஜஸ்ட் 48 டாலர்.. அதாவது இந்திய மதிப்பில் ரூ.₹4,100 மட்டும்
இந்த அண்ணாச்சி பை ஒரு ஸ்டைலான பை.. தனித்துவமான பை.. உங்க நாட்டின் அன்பைக் காட்டும் பை.. அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் பை என்று டிஆர் சேஞ்சுக்கு நார்ட்ஸ்ட்ரோம் தளம் இதை விளம்பரம் செய்துள்ளது. மேலும், இந்தியக் கலாச்சாரத்தை விரும்பும் அனைவரும் வைத்திருக்க வேண்டிய பை என்று சென்டிமெண்டாகவும் குறிவைத்து மார்க்கெட்டிங் செய்கிறார்கள். இதையும் கூட சிலர் வாங்கி ரிவ்யூ போட்டுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜப்பான் நிறுவனத்தின் பலே திட்டம்
இது தொடர்பான செய்தி இணையத்தில் டிரெண்டான நிலையில், இந்தியர்கள் பலரும் தங்கள் ஆதங்கங்களை கமெண்ட்டுகளில் கொட்டி தீர்த்து வருகிறார்கள். இங்க வீட்டில் இது மாதிரி 10 பை இருக்குப்பா யாராவது விற்க ஹெல்ப் பண்ணுங்கனு ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் இதைப் பார்க்கும் போது தனது இதயமே வலிக்கிறது.. இதையெல்லாம் விற்கிறார்களே எனப் புலம்பியுள்ளார். அட நீங்க வேற.. ஜப்பான் கம்பெனி இதை ஜப்பானில் விற்காமல்.. அமெரிக்காவில் மட்டும் விற்கிறார்கள் என்ற போதே உங்களுக்கு அமெரிக்கர்களின் வீண் செலவு திறன் புரிந்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications