Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிரியாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி ஆபரேஷன்! ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு இப்ராஹிம் அல் குரேஷி கொல்லப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹாசிமி நேற்றிரவு கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

Recommended Video

    தீர்த்துக்கட்டிய America | ISIS அமைப்பின் தலைவரின் கதையை முடித்த US Army

    சர்வதேச அளவில் மிக மோசமான பயங்கரவாத இயங்களில் ஒன்றாக இருப்பது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கமாகும். அல்கொய்தா அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் ஐஎஸ்ஐஎஸ் சர்வதேச அளவில் ஆபத்தான இயக்கமாக உருவெடுத்தது.

    ஈராக்கை மையமாகக் கொண்ட இந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் சிரியா, இராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகள் உள்ளன.

     ஐஎஸ்ஐஎஸ் தலைவர்

    ஐஎஸ்ஐஎஸ் தலைவர்

    ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் தலைவரான அபு இப்ராஹிம் அல் ஹாசிமியை பிடிக்க அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தொடர்ந்து தீவிர முயற்சி எடுத்து வந்தன. இந்தச் சூழலில் சிரியாவின் வடமேற்கு இட்லிப் பகுதியில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் நடத்திய ஆப்ரேஷனில் அபு இப்ராஹிம் கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதை அதிபர் பைடனும் தனது ட்விட்டரில் உறுதி செய்துள்ளார்.

     அதிபர் பைடன்

    அதிபர் பைடன்

    அபு இப்ராஹிம் அல் ஹாசிமி கொல்லப்பட்டது உறுதி செய்யும் விதமாக அதிபர் பைடன் பேசுகையில், "அமெரிக்கப் படைகள் நெருங்கி வரும் போது கோழைத்தனமான செயலாக அபு இப்ராஹிம் வெடிகுண்டு மூலம் தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். இதில் அவர் மட்டுமல்ல, அவர் இருந்த அந்த மூன்றாவது மாடி முழுவதுமாக முற்றிலும் தேசமடைந்தது.. செய்த குற்றங்களுக்குச் சட்டத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, அவரது குடும்ப உறுப்பினர்களையும் இதில் அவர் கொன்றுள்ளார்.

     அமெரிக்க ஆப்ரேஷன்

    அமெரிக்க ஆப்ரேஷன்

    உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கான அமெரிக்காவின் திறனை இந்த நடவடிக்கை காட்டுகிறது. பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்த நாட்டைப் பாதுகாக்க நான் தீர்க்கமான நடவடிக்கை எடுப்பேன். அமெரிக்க மக்களையும் அமெரிக்க நட்பு நாடுகளையும் பாதுகாக்கவும் உலகத்தைப் பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்காகவும் தான் வடமேற்கு சிரியாவில் இந்த ஆப்ரேஷன் நடத்தப்பட்டது" என்று அவர் தெரிவித்தார்.

     அமெரிக்க வீரர்கள்

    அமெரிக்க வீரர்கள்

    அபு இப்ராஹிம் அல் ஹாசிமி கொல்லப்பட்ட போது (வியாழக்கிழமை அதிகாலை) ராணுவ உயர் அதிகாரிகளுடன் அதிபர் பைடன் இருப்பது போன்ற படத்தையும் வெள்ளை மாளிகை வெளியிட்டது, இதற்கிடையில், அபு இப்ராஹிம் அல் ஹாசிமி தன்னை தானே வெடித்துக் கொண்ட போது, அங்கிருந்த மக்கள் சிலரும் உயிரிழந்ததாக அமெரிக்கா உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+