கொரோனா 'நெகட்டிவ்'- ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா புறப்பட்டார் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
வாஷிங்டன்: இந்தியாவின் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் (ஜோ பிடன்) புறப்பட்டார். முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஜோ பைடனுக்கு தொற்று பாதிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.
டெல்லியில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி ஆல்பனீஸ்,
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான்,
கனடா பிரதமர் ட்ரூடோ, ஜெர்மன் அதிபர் ஒலாஃப், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

ஜி 20 உச்சி மாநாட்டுக்காக டெல்லி மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பதால் அதி உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மனைவிக்கு கடந்த வாரம் திடீரென கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதனால் ஜோ பைடன், டெல்லி உச்சி மாநாட்டில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஜோ பைடனுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இதனால் ஜோ பைடனின் இந்திய பயணமும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து வாஷிங்டனில் இருந்து இந்தியாவுக்கு அதிபர் ஜோ பைடன் புறப்பட்டார். இன்று மாலை இந்திய பிரதமர் மோடியுடன் ஜோ பைடன் டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பின்னர் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் ஜோ பைடன் பங்கேற்கிறார்.
-
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications