வெற்றியோ தோல்வியோ.. இதுவே கடைசி தேர்தல்.. ஆனால் இடியாக இறங்கிய செய்தி! டிரம்ப்பின் நிலைமையை என்ன

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலில் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் டிரம்பிற்கு ரொம்பவே முக்கியமான ஒரு தேர்தலாக அமையப் போகிறது. இந்தத் தேர்தல் டிரம்பிற்கு கடைசி தேர்தலாக இருக்கும். இதனால் அவரது ஆதரவாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் வரும் நவ. மாதம் நடக்கும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவருக்கும் இடையே இதில் கடும் போட்டி நிலவி வருகிறது.

us presidential election 2024 kamala harris donald trump 2024

டிரம்ப்: 78 வயதான டிரம்ப் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் 3வது தேர்தல் இதுவாகும். ஏற்கனவே கடந்த 2016 அதிபர் தேர்தலில் வென்ற டிரம்ப், 2020 அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். ஆனால், அந்த தேர்தலில் அவர் பைடனிடம் தோல்வியடைந்தார். 2020ல் அதிபர் தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடந்ததாகவும் அதுவே அவரது வெற்றியைப் பறித்ததாகவும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இருப்பினும், அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு பக்கம் இருக்க அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒருவரால் அதிகபட்சம் 2 முறை மட்டுமே அதிபராக முடியும். 1932ல் ஃபிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட் தொடர்ச்சியாக 4 முறை அதிபரானார். ஒருவரிடமே இது போல அதிகாரம் குவிந்தால் அது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்பதால் ரூஸ்வெல்ட் மரணத்திற்குப் பிறகு ஒருவரால் 2 முறைக்கு மேல் அதிபராக இருக்க முடியாது என்ற விதியை கொண்டு வந்தனர்.

போட்டியிட முடியுமா: அதன்படி ஏற்கனவே ஒரு முறை அதிபராக இருந்துள்ள டிரம்ப், இந்த முறை வென்றால் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது. தோல்வி அடைந்தால் போட்டியிட முடியுமா என்ற சந்தேகம் வரலாம்.. அதற்கான பதிலையும் நாம் பார்க்கலாம்.

ரூல்ஸ் என்ன: அமெரிக்காவின் விதிகளின்படி ஒருவர் 2 முறைக்கு மேல் அதிபராக முடியாது என்ற போதிலும் அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். அதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை. அதன்படி டிரம்ப் தோல்வி அடைந்தாலும் மீண்டும் போட்டியிடலாம். ஆனாலும், அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபராக இருப்போர் ஆக்டிவாக இருக்க வேண்டும். முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்போது தான் அமெரிக்காவைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என அமெரிக்க மக்கள் கருதுகிறார்கள்.

அதிபர் டிரம்பிற்கு இப்போது வயது 78. இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தால் அடுத்து அவரால் 2028 தேர்தலில் தான் போட்டியிட முடியும். அப்போது அவருக்கு 82 வயதாகி இருக்கும். அப்போது நிச்சயம் அவரது வயது குறித்து பலரும் கேள்வி எழுப்புவார்கள். இப்போது அதிபராக இருக்கும் பைடனுக்கு கூட அதுவே சிக்கலாக அமைந்தது. 81 வயதான பைடன் மீண்டும் போட்டியிடக் கூடாது எனப் பலரும் தடை போட அவரது வயதே அவருக்குக் காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவே டிரம்பிற்கும் நடக்கலாம்,

டிரம்ப் உறுதி: இது மட்டுமின்றி சமீபத்தில் கொடுத்த நேர்காணலில் இதுவே தனது கடைசி தேர்தல் என்பதை டிரம்ப் உறுதி செய்துள்ளார். மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இல்லை என்றே நினைக்கிறேன். இதுவே கடைசி தேர்தலாக இருக்கும். மீண்டும் நான் போட்டியிட வாய்ப்பு இல்லை. இந்த முறை நிச்சயம் வெல்வேன் என நம்புகிறேன்" என்று கூறினார்.

டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் இந்தத் தேர்தலில் வெல்லலாம் என்று உறுதியாக இருந்தாலும் கூட கருத்துக்கணிப்பு முடிவுகள் அவருக்கு ஆதரவாக இல்லை. பைடன் அதிபர் ரேஸில் இருந்த வரை டிரம்ப் கை தான் ஓங்கி இருந்தது. ஆனால், பைடன் விலகி கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன் டிரம்ப் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+