"அமெரிக்கா செத்து போச்சு.." வெடியை வீசிய அதிபர் டிரம்ப்.. அரண்டு போன அமெரிக்கர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், பல்வேறு விவரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். அப்போது தான் அதிபராகப் பதவியேற்றபோது அமெரிக்கா உயிரற்ற நிலையில், செத்துப் போனது போல இருந்ததாகத் தெரிவித்தார். தான் வந்த பிறகே அமெரிக்காவை டாப் நாடுகளில் ஒன்றாக மாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவில் யூனியன் ஸ்டேட் உரை என்பது ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். அதில் அமெரிக்க அதிபர் ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நேரடியாக உரையாற்றுவார். நாட்டின் சாதனைகள், சவால்கள், அடுத்த ஆண்டு கொள்கைகளை விளக்குவார். இது பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் நடைபெறும்.

டிரம்ப்
அதன்படி இந்தாண்டுக்கான யூனியன் ஸ்டேட் உரையை டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்து உரையாற்றினார். அதிபராக முதலாம் ஆண்டு வெற்றிகரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், "இது அமெரிக்காவின் பொற்காலம்" என்றும், செத்துப் போன நிலையில் இருந்த அமெரிக்காவைத் தான் உலகின் மிகச் சிறந்த நாடாக மாற்றியதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும், "நமது தேசம் மீண்டு வந்துவிட்டது.. முன்பைவிட பெரிதாகவும் சிறந்ததாகவும் உருவெடுத்துள்ளது. வலிமையானதாகவும் செல்வம் அதிகம் கொண்ட நாடாகவும் மாறியுள்ளது. ஓராண்டுக்கு முன்பு உயிரற்ற நிலையில் நாம் இருந்தோம். இப்போது உலகின் மிகச் சிறந்த நாடாகத் திகழ்கிறோம். பணவீக்கம், எரிவாயு விலை, வேலைவாய்ப்பு எல்லாம் சிறப்பாக இருக்கிறது.
முதலீடுகள்
முந்தைய அரசு நான்கு ஆண்டுகளில் $1 டிரில்லியனுக்கும் குறைவான புதிய முதலீடுகளை ஈட்டியது. ஆனால், நான் ஒரே ஆண்டில் உலகம் முழுவதிலுமிருந்து $18 டிரில்லியனுக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்த்துள்ளேன். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் மிகச் சிறந்த வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே வேலை செய்து வருகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தனது பொருளாதாரத் திட்டங்களை ஆதரிக்காத எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரை டிரம்ப் மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் மேலும், "கடந்த ஆண்டு, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் பெரிய வரிச் சலுகைகளைக் கொண்டு வர முயன்றேன். எங்கள் குடியரசுக் கட்சி எம்பிக்கள் தான் அதைக் கொண்டு வந்தனர். ஆனால், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியில் அனைவருமே அதற்கு எதிராக வாக்களித்தனர். அவர்கள் வரியை அதிகளவில் உயர்த்த வேண்டும் என்றார்கள். ஆனால் நாங்கள் உறுதியாக நின்றோம்.
பல திட்டங்கள் வர போகுது
காப்பீட்டு நிறுவனங்களுக்கு மானியம் தரச் சொல்கிறார்கள். ஆனால், அதைத் தர மாட்டேன். அந்தப் பணத்தை நேரடியாக மக்களுக்கே வழங்க விரும்புகிறேன். இதன் மூலம் அவர்கள் குறைந்த செலவில் இன்னுமே சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸை எடுக்க முடியும். இன்னும் இதுபோல ஏகப்பட்ட நல்ல திட்டங்கள் வரவுள்ளது. இந்த மேடை மூலம் அமெரிக்கர்களுக்கு எனது சாதனைகளை எடுத்துச் செல்ல விரும்புகிறேன்












Click it and Unblock the Notifications