பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்குகளை பதுக்கிய சீனா.. அதிக விலைக்கு விற்பதாக அமெரிக்கா புகார்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கொரோனா வைரஸிலிருந்து காக்கும் பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்குகளை சீனா பதுக்கி வைத்துள்ளதோடு அதை மற்ற நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.

Recommended Video

    விதிமுறையில் மாற்றம்... இந்தியாவை நெருக்கும் சீனா

    சீனாவின் வுகான் பரிசோதனை கூடத்திலிருந்து வேண்டுமென்றே கொரோனா வைரஸ் பரப்பிவிடப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நாள்தோறும் சீனா மீது குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா தற்போது பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க் விற்பனை விவகாரத்திலும் புகார் கூறியுள்ளது.

    அதிகாரி

    அதிகாரி

    இதுகுறித்து வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி துறையின் இயக்குநர் பீட்டர் நவர்ரோ திங்கள்கிழமை கூறுகையில் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பாதுகாப்பு உபகரணங்கள் (கொரோனா வைரஸுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அந்த வைரஸ் பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள அணிந்து கொள்ளும் உடை) போதுமான அளவில் கிடைக்கவில்லை.

    வெளியுலகம்

    வெளியுலகம்

    ஏனெனில் அவற்றை பெய்ஜிங் பதுக்கி வைத்துள்ளது. கடந்த ஜனவரி- பிப்ரவரி மாதமே இந்த வேலையை சீனா செய்துவிட்டது. கொரோனா வைரஸ் பரவல் குறித்து வெளியுலகிற்கு தெரிவிக்கும் முன்னரே உலக நாடுகளிலிருந்து அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள், மாஸ்க்களை கொள்முதல் செய்து குவித்து வைத்துள்ளது. இதற்காக எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளது.

    கலால் துறை

    கலால் துறை

    ஆம் சீன அரசின் கலால் துறையிடம் இருந்து ஆதாரம் கிடைத்துள்ளது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் தேவை போக 18 மடங்கு அதிகமான மாஸ்க்களை வாங்கிக் குவித்துள்ளது. வெறும் மாஸ்க் மட்டும் 2,000 கோடி எண்ணிக்கையில் வாங்கியுள்ளது. பாதுகாப்பு கண்ணாடி மற்றும் கையுறைகளை வாங்கிக் குவிக்கவே அதிக பணத்தை செலவு செய்துள்ளனர்.

    தவறானது

    தவறானது

    பாதுகாப்பு உபகரணங்களை சீனா பதுக்கி வைத்துள்ளதோடு அவற்றை உலக நாடுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறது. இது மிகவும் அசிங்கமான விஷயம். இதுபோன்ற விவகாரங்கள் விசாரிக்கப்பட வேண்டும். இது போல் நடந்து கொள்வது ஒரு நாட்டிற்கு சரியான வழியல்ல என பாக்ஸ் நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+