வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரொம்ப சிம்பிள்.. சின்னதா மாற்றம் செய்தால் போதும்.. புதுவகை கொரோனா வைரசை தடுப்பூசி கட்டுப்படுத்தும்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்காவில் பரவும் புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் கொண்டதுதான் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி என்று நிபுணர்கள் மகிழ்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்தில் பரவக்கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் 70% வேகமாக பாதிப்பதாகவும், அதிகமான லோடுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவிலும் புதுவகை வைரஸ் பரவி வருகிறது கண்டுபிடிக்கப்பட்டது.

Vaccines Can Be Fight New Variants: Experts

இந்த நிலையில் பல்வேறு நாடுகளிலும் இது போன்ற வைரஸ்கள் பரவியிருக்கலாம், அதிகம் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம் என்ற எச்சரிக்கை மணியை உலக சுகாதார அமைப்பு எழுப்பியது.

இந்த நிலையில்தான் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியால், புதிய வகை வைரசை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. எனவே, முதல் கட்ட ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொள்ளத் தொடங்கினர்.

தடுப்பூசிகளின் இத்தகைய மாற்றங்களை "நிமிடங்களில்" செய்ய முடியும் "என்று பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பெரல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மருத்துவ பேராசிரியரும், இரண்டு தடுப்பூசிகளுக்கும் சக்தி அளிக்கும் மெசஞ்சர் ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ட்ரூ வெய்ஸ்மேன் கூறினார். அது ரொம்பவே ஈஸியானது என்றும் அவர் கூறுகிறார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் விஞ்ஞானிகளால் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் மாடலிங் பி 1.1.7 எனப்படும் வைரஸ் மாறுபாடு 56% அதிகமாக பரவக்கூடியது என்று கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை

அதேநேரம் மறுசீரமைக்கப்பட்ட தடுப்பூசியை வெளியிடுவதற்கு சிறிது கால நேரம் ஆகும். உற்பத்தி மற்றும் ஒழுங்குமுறை தேவைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்படலாம் என்பதை வெயிஸ்மேன் கூறுகிறார். ஒருவேளை கூடுதலாக சில மாதங்கள் தேவைப்படலாமாம். ஆனால் நீண்ட கால சோதனைகள் தேவைப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

English summary
Experts are pleased to announce that the Corona vaccine, which is currently being developed, has been shown to be effective against the new type of corona virus that is spreading in the UK and South Africa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X