வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜோ பிடனின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் இந்திய வம்சாவளி டாக்டர் விவேக் மூர்த்தி?

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபராகும் ஜோ பிடனின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அப்போது அமெரிக்காவில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான வல்லுநர் குழுவை திங்கள்கிழமையன்று அறிவிப்பதாக ஜோ பிடன் கூறியிருந்தார்.

இந்த குழுவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட விவேக் மூர்த்தி, இங்கிலாந்தில் பிறந்தவர்.

அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த போது, அந்நாட்டின் 19-வது மருத்துவ துறை தலைவராக நியமிக்கப்பட்டவர் விவேக் மூர்த்தி. பின்னர் அதிபராக டொனால்ட் டிரம் பதவி ஏற்ற நிலையில் அந்த பொறுப்பில் இருந்து விவேக் மூர்த்தி விலக நேரிட்டது.

 வெள்ளை மாளிகையின் கண்ணியத்தை காக்க.. ஜோ பிடன், கமலா ஹாரிஸ்க்கு மிச்சல் ஒபாமா சூப்பர் வாழ்த்து வெள்ளை மாளிகையின் கண்ணியத்தை காக்க.. ஜோ பிடன், கமலா ஹாரிஸ்க்கு மிச்சல் ஒபாமா சூப்பர் வாழ்த்து

கடந்த ஆண்டு மே மாதம் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பிரமிளா ஜெயபால் மற்றும் விவேக் மூர்த்தி ஆகியோரை சுகாதார குழுவின் இணை தலைவர்களாக ஜோ பிடன் நியமித்திருந்தார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவின் இணைத் தலைவராக விவேக் மூர்த்தி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Indian- American Vivek Murthy likely to be in US President elect Joe Biden's coronavirus task force.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X