உச்சமடையும் கனடா உடனான மோதல்.. "இந்தியாவுக்காக என்னால் பேச முடியாது.." அமெரிக்கா பரபர! என்னாச்சு
வாஷிங்டன்: இந்தியா கனடா மோதல் தொடரும் நிலையில், இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார்.
இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை சந்தித்துப் பேசினார். பல விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக தெரிகிறது.

இந்தியா கனடா இடையே மோதல் தொடரும் நிலையில், இந்த சந்திப்பில் இது குறித்து அமெரிக்கா இந்தியாவிடம் வலியுறுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் இந்த சந்திப்பில் என்ன ஆலோசிக்கப்பட்டது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பயங்கரவாதி கொலை: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் எதாவது வலியுறுத்தப்பட்டதா என்ற கேள்விக்கு அவர், "நான் இந்தக் கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லப் போவதில்லை. அமைச்சர் பிளிங்கன் நேரடியாக அவராகவே என்ன நடந்தது என்பதைச் சொல்வார். அதுவரை நான் இதில் எதுவும் சொல்ல மாட்டேன்.
அதேநேராம் இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர்களை வலியுறுத்துகிறோம். அவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வரும் காலத்திலும் நிச்சயம் தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா: விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதற்கு இந்தியாவின் பதில் என்ன என்ற கேள்விக்கு மில்லர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், "இந்தியாவுக்காக என்னால் பேச முடியாது. இந்தியாவே அவர்களுக்காகப் பேசுவார்கள். தனிப்பட்ட உரையாடல்களில் என்ன நடந்தது என்பதை என்னால் சொல்ல முடியாது. நாங்கள் என்ன கூறினோம் என்பதை மட்டுமே எங்களால் சொல்ல முடியும். நாங்கள் வலியுறுத்துவது ஒன்றுதான் கனடா விசாரணைக்கு ஒத்துழையுங்கள்" என்று அவர் தெரிவித்தார்.
அவர்கள் சொல்வதை நான் பேசப் போவதில்லை. நான் சொல்வதையோ அல்லது நாங்கள் சொல்வதையோ நான் பேசுவேன், அதுவே கனா நடத்தும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர்களை வலியுறுத்துகிறோம்" என்று அவர் மேலும் கூறினார். .
உச்சத்தில் மோதல்: கடந்த வாரம் தான் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாகப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபர கருத்துள் கூறினார். இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அரசியல் ரீதியான காரணங்களுக்காகக் கனடா இதுபோன்ற விமர்சனங்களை முன்வைப்பதாகவும் இந்தியா சாடியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில், "கனடா பிரதமர் ட்ரூடோ எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இந்த விவகாரம் குறித்து கனடாவுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். எங்களுக்குக் கனடாவின் விசாரணை முக்கியமானது. இதில் இந்தியாவும் கனடாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இதற்கு யார் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டியது முக்கியம்" என்று கூறியிருந்தார்.
பாதிப்பு: இந்த சம்பவம் காரணமாக இந்தியா கனடா உறவு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டினாலும், இது குறித்து எந்தவொரு ஆதாரத்தையும் கனடா வெளியிடவில்லை. கனடா குற்றச்சாட்டால் இரு நாட்டு உறவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கனடா நாட்டவருக்கும் விசா வழங்குவதை இந்தியா மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications