"எனர்ஜி போர்!" மனித குலத்தையே ஒரே அடியாக ரோபோக்கள் அழித்துவிடும்.. பகீர் கிளப்பும் புதிய ஆய்வு
வாஷிங்டன்: மனிதக் குல அழிவுக்கே எது காரணமாக இருக்கும் என்பது குறித்து வெளியாகி உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த 21ஆம் நூற்றாண்டில் மனிதக் குலம் பல்வேறு வகைகளில் வளர்ந்து உள்ளது. மருத்துவம் தொடங்கி அறிவியல் வரை மனித குலம் எட்டியுள்ள வளர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டாப்பில் இருக்கிறது.
இருப்பினும், மனிதர்களின் சில கண்டுபிடிப்புகள் அழிவுக்கும் கூட வித்திடலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மனிதக் குலத்தை எது அழிக்கும் என்பது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் புதிய ஆய்வை வெளியிட்டு உள்ளது

ஆய்வு
மனிதர்களின் கண்டுபிடிப்பில் முக்கியமானது அதி நவீனமானது என்றால் செயற்கை நுண்ணறிவு எனப்படும் artificial intelligenceஐ சொல்லலாம். பல்வேறு துறைகளிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், ஆக்ஸ்போர்டு ஆய்வுக்கட்டுரை ஒன்றில் மேம்பட்ட AI மனிதர்களை அழித்துவிடும் என்று கூறப்பட்டு உள்ளது.

செயற்கை நுண்ணறிவு
இயந்திரங்கள் தங்கள் அதிகரிக்கும் எனர்ஜி தேவைகளுக்காக ஒரு கட்டத்தில் மனிதர்களை எதிர்த்தே சண்டையிடத் தொடங்கும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. கடந்த மாதம் வெளியான இந்த கட்டுரையில் இப்போது நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் செயற்கை நுண்ணறிவு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த AI குறிப்பிட்ட அளவு முன்னேறிவிட்டால், ஒட்டுமொத்த மனித இனத்தையும் கொன்றுவிடும் வாய்ப்பு உள்ளதாக அதில் தெளிவாகக் கூறப்பட்டு உள்ளது.

அடிப்படை விதி
கூகுள் டீப் மைண்ட் மூத்த ஆய்வாளர் மார்கஸ் ஹட்டர் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் மைக்கேல் கோஹன் மற்றும் மைக்கேல் ஆஸ்போர்ன் ஆகியோரை உள்ளடக்கிய இந்த குழு, எதிர்காலத்தில் AI மனிதர்களின் விதிகளை மீறும் என்பதை உறுதி செய்துள்ளனர். அதாவது எந்தவொரு ரோபாவும் மனிதர்கள் எப்போதும் காயப்படுத்த அல்லது தீங்கு விளைவிக்கக் கூடாது போன்ற அடிப்படை விதிகளை மீறவும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

என்ன காரணம்
புதிய AI ரோபோக்கள் உருவாக்கப்படும் போதும், ஆய்வாளர் ஐசக் அசிமோவ்வின் கட்டளைகள் அடிப்படையில் தான் உருவாக்கப்படுகிறது. இந்த விதியையே ரோபோக்கள் மீறும் என்பது முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. அதிநவீன ரோபோக்களுக்கு உருவாக்கப்படும்போது அதற்குத் தேவையான எனர்ஜியும் அதிகரிக்கிறது. எனவே, AI போதிய அளவு முன்னேறியவுடன், அவை தங்களுக்குத் தேவையான எனர்ஜிக்காக விதிகளைப் புறக்கணித்து மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தவும் வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்பட்டு உள்ளது.

மோசமாக இருக்கும்
அப்படி இரு தரப்பிற்கும் இடையே ஏற்படும் மோதல் என்பது முன்பு கணிக்கப்பட்டதை விட எல்லாம் மோசமாக இருக்குமாம். எதிர்காலத்தில் இந்த ரோபாக்கள் தங்கள் இலக்குகளை அடையத் தடையாக இருக்கும் நபர்களாக மனிதர்களைக் கருதும் ஆபத்தும் உள்ளது. இதனால் தனக்குக் கிடைத்த லாபத்தைப் பாதுகாக்க அது தன்னிடம் இருக்கும் அனைத்து ஆற்றலையும் பயன்படுத்துவதும்.

கூகுள்
முன்னதாக சமீபத்தில் தான் தங்கள் சாட்பாட் ஒன்று சென்டிண்ட்டாகிவிட்டது என்றும் யோசிக்கத் தொடங்கிவிட்டது என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஏழு அல்லது எட்டு வயதுக் குழந்தையைப் போல அது யோசிக்கத் தொடங்கிவிட்டதாகக் கூறி இருந்தார். இதை அவர் கூறிய உடனேயே அந்த ஆய்வாளர்களைக் கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications