வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மவுனமாக இருக்கும் ஏலியன்கள்.. பூமியை இன்னும் தொடர்பு கொள்ளாதது ஏன் தெரியுமா.. ஆய்வாளர்கள் விளக்கம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: விண்வெளி துறையில் நாம் ஆய்வுகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறோம். பூமிக்கு வெளியே இருக்கும் வேற்று கிரக வாசிகளைத் தொடர்பு கொள்ளவும் முயன்று வருகிறோம். வேற்று கிரகங்களில் வசிக்கும் உயிரினங்களும் இதேபோல தொடர்பு கொள்ள முயல்கிறதா என்பதைப் பார்க்கலாம்.

பூமிக்கு வெளியே எதாவது உயிரினங்கள் உள்ளனவே என்பதே ஆய்வாளர்கள் மத்தியில் இப்போது இருக்கும் மிகப் பெரிய கேள்வியாக உள்ளது. இவ்வளவு பெரிய கேலக்ஸியில் பூமியைத் தவிர நிச்சயம் மற்ற இடங்களிலும் மக்கள் வாழ்வார்கள் என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இந்க ஏலியன்கள் எப்படி இருப்பார்கள்.. மனிதனை விடத் தொழில்நுட்பத்தில் முன்னேறியவர்களா இருப்பார்களா.. பார்க்க நம்மைப் போல இருப்பார்களா.. அல்லது வேறு வகையில் இருப்பார்கள் எனப் பல கேள்விகள் உள்ளன.

"மொத்தம் 140 சம்பவங்கள்.." அடிக்கடி பூமிக்கு விசிட் அடித்த ஏலியன்கள்? தனி டீமை இறக்கிய அமெரிக்கா

ஏலியன்கள்

ஏலியன்கள்

அப்படி வேறு கிரகத்தில் இருக்கும் நாகரீகம் நம்மைப் போல அல்லது நம்மைக் காட்டிலும் அதிக அறிவை பெற்றிருந்தால்.. அவர்கள் ஏன் நம்மைத் தொடர்புகொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. விண்வெளி துறையில் ஒவ்வொரு ஆண்டும் மிகப் பெரியளவில் ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கேள்வியே முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. வேறு கிரகங்களில் இருக்கும் உயிரினங்கள் ஏன் இன்னும் மனிதர்களைத் தொடர்பு கொள்ளவில்லை என்பது குறித்து SETI என்ற வேற்று கிரக நுண்ணறிவுக்கான தேடுதல் இன்ஸ்டிட்யூட் விளக்கியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த வேற்று கிரக உயிரினங்கள் high noon என்ற நிலைக்காகக் காத்திருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.. சூரியனைக் கடக்கும் போது நமது பூமி அவர்களுடன் நேருக்கு நேர் வருவதால், இந்த high noon சூழலில் எளிதாகப் பூமிக்கான சிக்னலை அனுப்ப முடியும். இந்த சூழலில் தான் காஸ்மிக் கதிர்கள் அதிகம் இருக்கும் என்பதால் சிக்னல்களை அனுப்ப அது சரியான சூழலாக இருக்கும் என்று வேற்று கிரகவாசிகள் கருதலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வேற்று கிரக வாசிகள்

வேற்று கிரக வாசிகள்

இந்த ஹை மூன் சமயத்தில் சூரியனை நிலவு முழுமையாகத் தடுக்கும் என்பதால் மற்ற கிரகங்களில் இருந்து சிக்னலை அனுப்ப அது சரியான நேரமாக இருக்கும் என்று வேற்று கிரகவாசிகள் கருதலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர். பூமிக்கு அப்பால் உயிர்கள் வாழ்கிறதா என்பதைக் கண்டறிய நமக்கு மிகப் பெரிய எனர்ஜி தேவை என்றும் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் சக்திவாய்ந்த டெலஸ்கோப்கள் தேவை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

டெக்னோ சிக்னேச்சர்

டெக்னோ சிக்னேச்சர்

மேலும், டெக்னோ சிக்னேச்சர் (Techno-signatures) மூலம் சிக்னல் அனுப்ப அதிகப்படியான எனர்ஜி தேவை.. இல்லையென்றால் அவை எளிதாக விண்வெளியில் அழிந்துவிட வாய்ப்புகள் உள்ளன. அந்தளவுக்கு வேற்றுகிரவாசிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து இருக்குமா என்பது மற்றொரு சந்தேகம். மேற்கு வெர்ஜீனியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ராபர்ட் சி. பைர்ட் கிரீன் பேங்க் டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி 12 தொலைதூரக் கிரகங்களிலிருந்து வரும் சிகன்கலை தேடினார்கள்.. இதில் அவர்கள் சுமார் 34,000 ரேடியோ சிக்னல்களைக் கண்டறிந்தனர். இருப்பினும், அவற்றில் 99.6% வெற்று சிக்னல்கள் என்று நிராகரிக்கப்பட்டது.

இரண்டு சிக்னல்கள்

இரண்டு சிக்னல்கள்

இருப்பினும், அதில் இரண்டு சிக்னல்கள் வெற்று ரேடியோ சிக்னலாக இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது. அவை கெப்லர்-1332பி மற்றும் கெப்லர்-842பி என்ற இரண்டு கிரகங்களில் இருந்து வந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள். இந்த இரண்டுமே பூமியை விடப் பெரிய பாறை கிரகம் ஆகும். இந்த கிரகங்கள் தொலை தூரத்தில் இருப்பதால் அந்த கிரகம் குறித்து ஆய்வாளர்கள் இன்னும் முழுமையாக ஆய்வு நடத்தவில்லை. இந்த துறையில் வரும் காலத்தில் ஆய்வுகள் அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் வெற்று கிரக உயிரினங்கள் குறித்த கேள்விக்குப் பதில் கிடைக்கும் என்றும் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

English summary
Aliens may be waiting for hing moon position to contact earth: All things to know about Aliens and ETs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X