வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"உள்ளாடை என்ன விலை?" ராப்பர் கேட்ட கேள்வி! அடுத்த நொடி ஸ்டேஜுக்கு பறந்த 678 உள்ளாடைகள்! என்னாச்சு

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ராப்பர் ஒருவர் பாடிக் கொண்டே இருக்கும் போதே, மேடையை நோக்கி உள்ளாடைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நமது இந்தியாவில் சினிமா துறை எந்தளவுக்கு பெரியதோ, அதை விட அமெரிக்காவில் இசைத்துறை பெரியது. அங்கு ஒவ்வொரு பாடர்களுக்கும் கூட மிகப் பெரியளவில் ரசிகர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு பாடல்கள் வெளியாகும் போதும் இவர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். அதேபோல இசைக்கலைஞர்கள் தொடர்ச்சியாக அமெரிக்காவில் பல இடங்களில் இசை கான்சர்டுகளையும் நடத்தி வருவார்கள்.

ஆளுநருக்கு கோடி கோடியாய் செலவிடும் தமிழ்நாடு.. இந்தியாவில் முதலிடம்! ரிப்போர்டால் “ஸ்டன்” ஆன பிடிஆர் ஆளுநருக்கு கோடி கோடியாய் செலவிடும் தமிழ்நாடு.. இந்தியாவில் முதலிடம்! ரிப்போர்டால் “ஸ்டன்” ஆன பிடிஆர்

 அமெரிக்க இசை நிகழ்ச்சி

அமெரிக்க இசை நிகழ்ச்சி

நம்ம ஊரில் இருப்பதைப் போல ஹாலிவுட் சினிமாக்களில் பாடல்கள் இருக்காது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகவே அங்கு ஒவ்வொரு பாடகர்களும் பாடல்களை வெளியிட்டு, கான்சர்ட்டுகளை தொடர்ச்சியாக நடத்தி வருவார்கள். இதுபோன்ற கான்சர்டுகளில் தான் அவர்களுக்குப் பெரிய வருமானமும் கிடைக்கும். மேலும், பல பாடகர் இந்த கான்சர்டுகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உதவி திட்டங்களையும் செய்துள்ளனர். அப்படியொரு சம்பவம் தான் இப்போது அமெரிக்காவில் நடந்துள்ளது.

 இளம் ராப்பர்

இளம் ராப்பர்

அமெரிக்காவில் ராப் பாடல்கள் எப்போதும் புகழ்பெற்றது. அங்குள்ள இளம் ராப்பர்களில் ஒருவர் யுங் கிரேவி.. 26 வயதான இவர், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பிரபலமாகத் தொடங்கினார். சவுன்ட் கிளவுட் தளத்தில் இவரது பாடல்கள் ஹிட் அடிக்க, ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்தது. இதுவரை மூன்று ஆழ்பம்களை வெளியிட்டுள்ள இவர், ஏழு சர்வதேச இசை டூர்களையும் நடத்தியுள்ளார். அமெரிக்காவில் வளர்ந்து வரும் ராப்பர்களில் ஒருவரான இவர், சமீபத்தில் மினியாபோலிஸ் இசைக்கச்சேரி நடத்தினார்.

வினோதம்

வினோதம்

இதில் பெருந்திரளான ரசிகர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், இவர் தனது பெண் ரசிகர்களிடம் மேடையை நோக்கி வீசி எறியும்படி வினோதமான கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். இதையும் கூட கேட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் உள்ளாடைகளை வீசி எறிந்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை அவர் தனது டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

 பறந்த வந்த உள்ளாடைகள்

பறந்த வந்த உள்ளாடைகள்

ஒரே இரவில் மட்டும் இசைக்கச்சேரியில் சுமார் 100க்கும் மேற்பட்ட உள்ளாடைகளை அவர் சேகரித்துள்ளதாகவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த உள்ளாடைகளைப் பெண்கள் விடுதிக்கு நன்கொடையாக அளிக்க உள்ளதாக அவர் மேடையில் அறிவித்தார். அதன் பின்னரே, மேடையை நோக்கி பெண்கள் தங்கள் உள்ளாடைகளை வீசி எறியத் தொடங்கினர்.மேலும், இந்த உள்ளாடைகளுக்கு நிகரான தொகையைத் தானும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மேடையில் உள்ளாடைகளின் விலையையும் அவர் கேட்டார்.

 எதற்கு தெரியுமா

எதற்கு தெரியுமா

இந்த வீடியோ தான் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ராப்பர் எடுத்துள்ள முயற்சியை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இன்னும் சிலர் உள்ளாடையின் விலையை அவர் கேட்டிருந்ததற்குப் பதிலும் கூட அளித்து வருகின்றனர். இந்தத் தொகை மூலம் மார்பக புற்றுநோயை ஒரு சதவிகிதம் குறைந்தாலும் கூட அது பெரிய வெற்றி தான் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 மொத்தம் 678

மொத்தம் 678

அன்றைய தினம் மேடையில் ஒரே நாளில் ராப்பர் 100க்கும் மேற்பட்ட உள்ளாடைகளைச் சேகரித்துள்ளார். இதுவரை அவர் இதேபோல சுமார் 678 உள்ளாடைகளைச் சேகரித்துள்ளார். அமெரிக்கா முழுக்க இவர் தொடர்ச்சியாக இசைக்கச்சேரிகளை நடத்தி வரும் நிலையில், இதில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. அதேநேரம் இதுவரை எந்த தொண்டு நிறுவனத்திற்கு இவர் எந்தளவுக்கு நிதியை நன்கொடையாக அளித்துள்ளார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

English summary
Young Rapper Yung Gravy catches bras thrown at him stage: Breast cancer awareness US Young Rapper Yung Gravy new campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X