உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் சிக்கிய 16.64 கோடி பேர் - 14.72 பேர் மீண்டனர்

கொரோனா பரவல் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் பல நாடுகளில் குறையத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 6,10,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் பிடியில் இருந்து உலகம் முழுவதும் 14,72,16,774 பேர் மீண்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 6,10,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,64,54,364 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் 14,72,16,774 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலக மக்களை தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. தடுப்பூசிகள் கண்டு பிடிக்கப்பட்டு பல கோடி பேருக்கு செலுத்தப்பட்ட நிலையிலும் கொரோனாவின் கோரத்தாண்டவத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை.

கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனாவால் 6,10,427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,64,54,364 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 14,72,16,774 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

12,273 பேர்

12,273 பேர்

கடந்த 24 மணிநேரத்தில் உலகம் முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்ட 12,273 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,56,990 பேராக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 1,57,40,705 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் கவலைக்கிடமான நிலையில் 98,239 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சூறையாடிய கொரோனா

சூறையாடிய கொரோனா

உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் 28,527பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,38,61,911 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவால் அமெரிக்காவில் 647 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 6,03,399 பேராக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 58,59,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா மரணங்கள்

கொரோனா மரணங்கள்

இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,54,395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 4,143 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,95,508 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 2,30,59,017 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு 29,30,544பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 8,944 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

பரவல் அதிகரிப்பு

பரவல் அதிகரிப்பு

பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 77,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,59,76,156 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 2,136 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவில் இருந்து 14,422,209 பேர் மீண்டுள்ளனர். 11,07,420 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+