For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூணூல் இதுல ஏன்?.. முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் "ஹிஜாப்" அணிவோம்.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி

ஹிஜாப் அணிவோம் என்று கூறி முஸ்லிம் பெண்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவளித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம்" சீனுக்கு வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு ஒரு முக்கிய கோரிக்கை ஒன்றையும் அவர் விடுத்துள்ளார்.

Recommended Video

    பூணூல் இதுல ஏன்?.. முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம்.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி

    கொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகாகொழுந்தனோடு கள்ளக்காதல்.. தங்கையையும் 3 குழந்தைகளையும் அடித்தே கொன்ற அக்கா! ஷாக்கில் கர்நாடகா

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அந்த பெண்ணை பின்தொடர்ந்து ஜெய்ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டனர். எனினும், அந்த கும்பலை துணிச்சலுடன் எதிர்கொண்ட அந்த மாணவி அல்லாஹு அக்பர் என பதிலுக்கு முழங்கினார்... இந்த வீடியோ நேற்றில் இருந்து இந்தியாவை அதிர வைத்து வருகிறது.

     வகுப்பறை

    வகுப்பறை

    இதையடுத்து, கல்லூரி வகுப்பறைக்குள் நுழைந்து ஏபிவிபி மாணவர்கள் ஆசிரியர்களுக்கும் மாணவர்களையும் அச்சுறுத்தும் வகையில் இடையூறு செய்தனர்.. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது... இந்த சம்பவம் 2 விதமான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறது.. தங்கள் சுயநலத்திற்காக மாணவர்களிடம் அரசியலை புகுத்துவது நியாயமில்லை என்றும், படிக்கிற இடத்தில் உடைகள் விஷயத்தை பேசுவதே தவறு" என்றும் கண்டனங்கள் எழுகின்றன.

     பிரதமர் மோடி

    பிரதமர் மோடி

    மற்றொரு பக்கம், மோடி ஆட்சியில் சகிப்புத்தன்மை இல்லாமல் இருக்கிறதே ஏன் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.. ஏற்கனவே இறைச்சிக்காக பசுக்களை கடத்தியதாக இஸ்லாமிய மற்றும் தலித்துகள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது.. மற்றொரு புறம் சிஏஏ , இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா என இஸ்லாமியர்களுக்கு எதிராக நடவடிக்கைகளில் பாஜகவும், இந்து அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.. இப்போது ஹிஜாப் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்... அத்துடன், மாணவிகளுக்கு எதிராக அவர்கள் காவி துண்டு அணிந்துகொண்டும் போராட்டமும் பதிலுக்கு நடத்துவது சரியா? என்ற கேள்விகளை பலர் எழுப்பி வருகின்றனர்.

    நியாயம்

    நியாயம்

    யாரும் மத அடையாளங்களோடு வகுப்பறைக்கு வரக்கூடாது, அப்படி அவர்கள் வந்தால் நாங்களும் வருவோம் என்று இஸ்லாமிய மாணவிகள் சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது என்ற ஆதரவாக கருத்துக்கள் எழுகின்றன.. "முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்தியத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என பெண் கல்வி செயற்பாட்டாளரான மலாலா தெரிவித்த கருத்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

     போராட்டங்கள்

    போராட்டங்கள்

    எனினும், படிப்பை விட்டு விட்டு இப்படி தேவையில்லாத போராட்டங்களில் மாணவர்கள் குதித்ததால் பெற்றோர்களும், பொதுமக்களும் பெரிதும் கவலையில் உள்ளனர்.. கல்லூரி வளாகத்திலேயே இப்படி மத, ஜாதி ரீதியாக பிளவுபட்டதைப் பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போய் வேதனையில் உள்ளனர்.. இப்போதைக்கு மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறையை அறிவித்துள்ளது கர்நாடக அரசு... கர்நாடக ஹைகோர்ட்டிலும் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கி நாடே உள்ளது..

     லட்சுமி ராமகிருஷ்ணன்

    லட்சுமி ராமகிருஷ்ணன்

    இந்நிலையில், முஸ்லிம் பெண்களுக்கு தன்னுடைய ஆதரவு கரத்தை நீட்டியுள்ளார் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன்.. இதுகுறித்து ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி தந்துள்ளார்.. அதில், "ஹிஜாப் பிரச்சினை இனியும் தொடர்ந்தால் நாங்கள் அனைவரும் முஸ்லிம் சகோதரிகளுக்கு குரல் கொடுக்க ஹிஜாப் அணிவோம்.. 22 வருடங்களாக முஸ்லிம் நாட்டில் வாழ்ந்திருக்கிறோம்.. ஹிஜாப் அணிபவர்களிடம் அதை அகற்ற சொல்வது வலி மிகுந்தது.

     ஹிஜாப்

    ஹிஜாப்

    ஹிஜாப் அணிவது ஒரு பாதுகாப்பான உணர்வு.. எனக்கே அதை அணிய பலமுறை தோன்றியுள்ளது... ஹிஜாபை அணிய கூடாது என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது? மாணவர்களை இதற்காக தூண்டி விடுவதை கடுமையாக கண்டிக்கிறேன்" என்று எச்சரித்துள்ளார்... இதனிடையே இது தொடர்பாக ஒரு வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்..

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    அதில், "கர்நாடகாவில் நடக்கும் ஹிஜாப் விஷயத்தில் வீடியோக்கள் வெளிவருவதை பார்க்கும்போது ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு.. இன்னைக்கு ஒரு வீடியோ பார்த்தேன்.. அதில் ஒரு பெண்ணை, நிறைய பசங்க சுத்தி வளைச்சு கோஷம் எழுப்பறாங்க.. அந்தபெண்ணும் திரும்பி பேசறா.. இதெல்லாம் என்ன? நம்ம நாட்டில் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறையான வாழ்க்கையை வாழ உரிமை உள்ளது.. அது அடிப்படை உரிமை.. அதை நாகரீகத்துடன் கடைப்பிடிக்க வேண்டும்..

     உணர்வுப்பூர்வமான விஷயம்

    உணர்வுப்பூர்வமான விஷயம்

    நாங்க ஒரு முஸ்லிம் நாட்டில் 22 வருஷமாக இருந்திருக்கேன்.. அதனால சொல்றேன்.. ஹிஜாப் போட்டு பழகினவங்க, அதுவும் அவங்க விருப்பப்படி போட்டு பழகினவங்களுக்கு அதை நீக்க சொல்வது கொடுமையானது.. மனிதாபிமானமற்றது.. அதை கட்டாயப்படுத்தக்கூடாது.. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம்.. இதில போய் கை வைப்பது, போராட்டமாக்குவது இளம் பிள்ளைகளின் மனதை இதுக்காக மாற்றுவது, ரொம்பவும் தவறுதலான விஷயம்.. இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.

     பெற்றோர்கள்

    பெற்றோர்கள்

    மத்ததை எல்லாம் விடுங்க.. ஒரு இந்த நாட்டின் பிரஜையாக இதை கடுமையாக கண்டிக்கிறேன்.. ,இதுக்கு பின்னாடி யார் இருந்தாலும் சரி, பிள்ளைகளின் மனசை கெடுத்துடாதீங்க.. ப்ளீஸ்.. அதேபோல பெற்றோர்களுக்கும் ஒரு கோரிக்கையை வைக்கிறேன்.. உங்க பசங்களுக்கு சொல்லி புரிய வையுங்க.. அந்த பெண்ணை ஹிஜாப் போட வேணாம்னு சொல்றதுக்கு இந்த பையன்களுக்கு என்ன உரிமை இருக்கு? உங்க வீட்டுல இருக்கிற அக்கா, அம்மாகிட்ட இதை பண்ணு, அதை பண்ணுன்னு சொன்னால் சும்மா இருப்பீங்களா?

     பாதுகாப்பான உடை

    பாதுகாப்பான உடை

    ஹிஜாப்புக்குள்ளேயே இருந்து பழகினவங்களுக்கு அது ஒரு பாதுகாப்பான ஃபீலிங்.. நமக்கே பல தடவை தோணியிருக்கு.. நம்மை பார்த்து கண்டபடி கமெண்ட் அடிக்கும்போது, கெட்ட கெட்ட வார்த்தை பேசும்போது, பேசாம நாமளும் இப்படி கவர் பண்ணிட்டோம் என்றால், இந்த மாதிரி கீழ்த்தரமான வார்த்தைகளில் எல்லாம் போய் மாட்டிக்க வேணாம்னு பல தடவை எனக்கே தோணும்.. ஹிஜாப் போட்டு பழகினவங்களை நீக்க சொல்றது, அவங்களுக்கு எவ்வளவு வலியை தரும்? அது தவறு..

     மீடியாக்கள்

    மீடியாக்கள்

    மீடியாக்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.. இந்த பிரச்சனை, அதன் போக்கிலேயே டீல் பண்ணுவோம்.. இதுக்கு நடுவில் தேவையில்லாமல் பூணுல் போன்ற விஷயங்களை இழுக்காதீங்க.. இது ஒன்றும் பூணுல் பற்றின விஷயமோ, ஹிஜாப் பற்றின விஷயமோ இல்லை.. தனிமனித அடிப்படை உரிமை பற்றினது.. அவரவர் வாழ்க்கையை பிடித்தபடி, சுதந்திரத்துடன் வாழ உரிமை இருக்கிறது.

    ஹிஜாப்

    ஹிஜாப்


    பாதுகாப்பற்ற உணர்வை முஸ்லிம் பெண்களுக்கு தயவுசெய்து தந்துடாதீங்க.. இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்க.. தமிழக முதல்வருக்கும் பிரதமருக்கும் கோரிக்கை வைக்கிறேன்.. ஒரு பெண்ணா, முஸ்லிம் சகோதரிகளுக்காக நான் குரல் கொடுக்கிறேன்.. இனிமேலும் இது தொடர்ந்தால், நாங்கள் அத்தனை பேரும் ஹிஜாப் போட்டுக் கொண்டு வெளியே வர வேண்டி இருக்கும்.. தயவுசெய்து இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்க" என்று உருக்கத்துடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    English summary
    We will also wear hijab for muslim sisters, Lakshmi Ramakrishnan supports and releases Video
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X