பஞ்ச தந்திர காயினுக்கு சிறப்பு சலுகை.. பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டது யார்?.. ரசிகர்கள் கவலை!
சென்னை: பிக்பாஸ் சீசன் 5லிருந்து இந்த வாரம் நாட்டுப்புற பாடகி சின்னபொண்ணு எலிமினேட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கப்பட்டு 25 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போதுதான் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
வாரந்தோறும் ஒருவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கம். அதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒரு போட்டியாளரை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்வர். அந்த வகையில் மக்கள் வாக்களிப்பு மூலம் எந்த போட்டியாளர் குறைந்த வாக்குகளை பெற்றுள்ளாரோ அவரே எலிமினேட் செய்யப்படுகிறார்.

நாமினேஷன்
நமீதா மாரிமுத்து தாமாக வெளியேறியது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கடந்த இரு வாரங்களில் இரு நாமினேஷன்கள் நடந்துள்ளன. அதில் முதலில் நாடியா சாங்கும், அடுத்தது யூடியூபர் அபிஷேக் ராஜாவும் வெளியேற்றப்பட்டனர். இந்த வார நாமினேஷன் பிராசஸ்ஸை பிக்பாஸ் அறிவித்தார்.

சின்னபொண்ணு
இதையடுத்து அபினய், சின்னபொண்ணு, வருண், பிரியங்கா, சுருதி, அக்ஷரா, பாவனி, இமான் அண்ணாச்சி, இசைவாணி ஆகிய 9 பேர் நாமினேஷனில் இருந்தனர். இதில் பஞ்ச தந்திர காயினை வைத்திருந்த இசைவாணி, வருண், பாவனி ஆகிய மூவருக்கும் ஒரு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டது. அதாவது அவர்களுக்கு பதிலாக அவர்களின் காயினை பயன்படுத்தி வேறு யாரையாவது நாமினேட் செய்யலாம் என்ற சலுகை அளிக்கப்பட்டது.

கமல்ஹாசன்
ஆனால் மூன்று பேருமே அந்த சலுகையை ஏற்க மறுத்து நாமினேஷனில் தொடர்ந்தனர். இதையடுத்து நேற்று நடந்த நிகழ்ச்சியில் இசைவாணியும் இமான் அண்ணாச்சியும் காப்பாற்றப்பட்டதாக கமல்ஹாசன் அறிவித்தார். இந்த நிலையில் சின்னபொண்ணு, அபினய் ஆகியோரில் யார் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

தகவல்கள்
இந்த நிலையில் இன்றைய தினம் சின்னபொண்ணு வெளியேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் வாரமும் அபிஷேக் வெளியேற்றப்பட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அது போல் ஆனால் முதல் வாரம் நாடியா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து அடுத்த வாரமும் அபிஷேக்கின் எவிக்ஷன் குறித்து எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் அபிஷேக் ராஜா கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இந்த முறை அபினய் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சின்னபொண்ணு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இதை உறுதிப்படுத்த இன்றைய நிகழ்ச்சியை பார்த்தால்தான் தெரியும்.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications