அமெரிக்க டாலருக்கு குட் பை சொல்ல தயாராகும் இந்தியா!! ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான யோசனை
உலக அளவில் வலிமையான நாணயமாக அமெரிக்க டாலர் இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பொருட்களை உலக நாடுகள் டாலரை கொடுத்து தான் வாங்க வேண்டி இருக்கிறது. எனவே பல்வேறு நாடுகளும் தங்களுடைய நாணயத்தை கொடுத்து டாலரை வாங்கி பின்னர் அந்தப் பணத்தில் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை வாங்க வேண்டி இருக்கிறது.
அதாவது சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. இதனால் தான் உலக அளவில் வலிமைமிக்க ஒரு நாணயமாக டாலர் இருந்து வருகிறது, இதுவே பல்வேறு விவகாரங்களிலும் அமெரிக்காவின் கை ஓங்கி இருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. ஆனால் பல்வேறு நாடுகளும் தற்போது விழித்து கொண்டன. உலக அளவில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என்பதிலும் டாலரை சார்ந்து இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.

இதனை முதலில் தொடங்கி வைத்தது சீனா என்றே கூறலாம். சீனா அதிக அளவு தங்கத்தை வாங்கி டாலரின் மதிப்பை குறைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவும் தற்போது டாலர் வர்த்தகத்தை சார்ந்து இருப்பதை குறைப்பதற்கு முடிவு செய்து இருக்கிறது. இந்தியா இதற்காக பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை ஒருங்கிணைக்க யோசனை தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா,இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த கூட்டமைப்பு. அண்மையில் இந்த கூட்டமைப்பில் ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்தது. இந்த பிரிக்ஸ் நாடுகளின் டிஜிட்டல் கரன்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த உறுப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சுற்றுலா தொடர்பான பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொள்ளலாம் என்றும் டாலரை சார்ந்து இருப்பதை குறைக்க முடியும் என்றும் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீது கடுமையான வர்த்தக போரை தொடுத்து இருக்கிறார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பை விதித்திருக்கிறார். இதுவரை இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தமும் முடிவாகவில்லை. இந்த சூழலில் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையால் பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பத்திரப்பதிவில் வரும் அதிரடி மாற்றம்!! இனி சார்பதிவாளர் அலுவலகமே போகத் தேவையில்லை..!!
எனவே பிரிக்ஸ் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் டிஜிட்டல் நாணயங்களுக்குள் ஒருங்கிணைப்பை கொண்டு வர வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆலோசனை தெரிவித்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பு வந்துவிட்டால் இந்த நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை சார்ந்து இருக்க வேண்டிய தேவையில்லை. இந்த ஆண்டு இந்தியா தலைமை ஏற்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டினை நடத்த இருக்கிறது.
2030க்குள் உலக அளவில் இந்தியாவின் அந்தஸ்தே மாறப் போகுது – நல்ல செய்தி சொன்ன எஸ்பிஐ!!
இந்த மாநாட்டின் போது இது தொடர்பான முக்கியமான முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே பிரிக்ஸ் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அமைப்பு என அதிபர் டிரம்ப் விமர்சனம் செய்திருக்கிறார். இந்த சூழலில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுடைய வர்த்தகத்திற்கு டாலர் அல்லாமல் தங்களுக்கு இடையிலான டிஜிட்டல் கரன்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் ஆலோசனை முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
Credit: Goodreturns
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications