Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parasakthi Day 11 Box Office: 100 கோடிகளை அள்ளிய பின்னரும் பாக்ஸ் ஆபீஸில் பராசக்தி கவலைக்கிடம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் பராசக்தி. படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் கடந்த 10ஆம் தேதி பொங்கல் திருவிழாவில் வெளியானது. இப்படி இருக்கையில் படம் வெளியாகி முதல் 11 நாட்களில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் சிவகார்த்திகேயனின் 25 வது படம் பராசக்தி. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் கடந்த 1965ஆம் ஆண்டு கால கட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்புக்கு எதிராக நடைபெற்ற மொழிப்போரை மையமாக கொண்டு படத்தை உருவாக்கி உள்ளார்கள். படம் வெளியாகி வெகுஜன ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படத்திற்கு முதல் இரண்டு நாட்களில் நல்ல ஓபனிங் கிடைத்தது.


Sivakarthikeyan Parasakthi Day 11 Box Office Collection Which Cross Nearby RS 101 Crores
Photo Credit:

இது மட்டும் இல்லாமல் படத்திற்கு திமுகவினர் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதேபோல் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கும் படம் பிடித்துப்போனதால் படத்தை கொண்டாடினர். ஆனால் படத்திற்கு விஜய் ரசிகர்கள் வேண்டும் என்றே நெகடிவ் விமர்சனங்களைப் பரப்பினர். இது மட்டும் இல்லாமல் படக்குழுவினரை மிகவும் மோசமாகவும் விமர்சித்தனர். இப்படி இருக்கும்போது இவர்களின் பொய் பிரச்சாரம் படத்தின் வசூலை வெகுவாக பாதித்தது.

படம் முதல் இரண்டு நாட்களில் ரூபாய் 50 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்தது. அதேபோல் முதல் 10 நாட்களில் ரூபாய் 100 கோடிகளை வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் டான், அயலான், அமரன், மதராஸி மற்றும் பராசக்தி என இந்த படங்கள் அடுத்தடுத்து ரூபாய் 100 கோடிகளை வசூலித்துள்ளது. இந்நிலையில் நேற்றுடன் படம் வெளியாகி 11 நாட்கள் ஆகியுள்ள நிலையில் படம் 11வது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் ரூபாய் 26 லட்சங்களுக்கு மேல் வசூலித்துள்ளதாக சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. பராசக்தி படம் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பாக்ஸ் ஆபீஸில் படம் படுத்துவிட்டது என்ற நிலையில் தான் படத்தின் நிலை உள்ளது.


Sivakarthikeyan Parasakthi Day 11 Box Office Collection Which Cross Nearby RS 101 Crores
Photo Credit:

Credit: Filmibeat

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+