தமிழ்நாடு அரசு விருதுகள் அறிவிப்பு: கார்த்தி, தனுஷ், நயன்தாரா, விஜய் சேதுபதிக்கு விருது!
சென்னை: சமூகச் சிந்தனைகளையும் நல்லுணர்வோடும் வெளிவரும் திரைப்படங்கள், சின்னத்திரை நெடுந்தொடர்களை ஊக்குவிக்க தமிழக அரசு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறது. தற்போது 2016-2022ஆம் ஆண்டுகளுக்கான அரசு திரைப்பட விருதுகளும், 2014-2022ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிப்ரவரி 13ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விருதுகளை வழங்கவுள்ளார். விருது பெறுவோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி - புரியாத புதிர், கார்த்தி - தீரன் அதிகாரம் ஒன்று, தனுஷ் - வடசென்னை, ஆர்.பார்த்திபன் - ஒத்த செருப்பு, சூர்யா - சூரரைப் போற்று, ஆர்யா - சார்பட்டா பரம்பரை, விக்ரம் பிரபு - டாணாக்காரன்; சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் தேர்வாகினர். சிறந்த திரைப்படங்களாக மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகியவை தேர்வு செய்யப்பட்டன.
சின்னத்திரை விருதுகளில் எம்.இராஜ்குமார், ஆர்.பாண்டியராஜன், கௌசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ.சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் சிறந்த கதாநாயகர்களாகவும்; ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கேபரல்லா செல்லஸ், சைத்ரா சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வாகினர்.
அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய நெடுந்தொடர்கள் சிறந்த தொடர்களாகத் தேர்வாகின.
சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசு ₹2 லட்சம், இரண்டாம் பரிசு ₹1 லட்சம், மூன்றாம் பரிசு ₹75 ஆயிரம், சிறப்புப் பரிசு ₹75 ஆயிரம். பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படத்திற்கு சிறப்புப் பரிசு ₹1.25 லட்சம். நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசும்.
#BestActors #tamilnaduawards #dhanush #nayanthara #VijaySethupathi #suriya #karthi #jyotika pic.twitter.com/9jihl3xevS
— MARI (@smari9352) January 29, 2026
சின்னத்திரை நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசு ₹2 லட்சம், இரண்டாம் பரிசு ₹1 லட்சம். ஆண்டின் சிறந்த சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளருக்கு தலா ₹1 லட்சம் அறிவிப்பு. சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
Credit: Filmibeat
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications