Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கம் விலை குறைய போகுது!! கிரீன்லாந்து விவகாரத்தில் திடீரென நிலைப்பாட்டை மாற்றிய டிரம்ப்!!

Subscribe to Oneindia Tamil

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றியே தீருவேன் என கூறி இரண்டு வாரங்களாக பெரிய சம்பவமே செய்துவிட்டார். கிரீன்லாந்தை வாங்குவதற்கு அந்த நாட்டு மக்களுக்கு பணம் கொடுக்கப்படும், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் , டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு கடுமையான இறக்குமதி வரி விதிக்கப்படும் என தொடர்ச்சியாக மிரட்டல் விடுத்து வந்தார்.

கடந்த ஒரு வார காலமாக இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்கா கிரீன்லாந்தை கட்டுக்குள் எடுக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம் வரி விதித்தால் பதிலுக்கு போட்டி வரி விதிப்போம் என அறிவித்தன. இதனால் உலக அளவில் வர்த்தக மோதலும் போர் பதற்றமும் உண்டானது. பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.


trump Greenland Tariff Nato

இந்த சூழலில் திடீரென அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி இருக்கிறார். கிரீன்லாந்து விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்கப் போவதில்லை என தெரிவித்திருக்கும் அவர் வரி விதிக்கப்படும் என்ற மிரட்டலில் இருந்தும் பின்வாங்கி இருக்கிறார். உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதன் ஒரு பகுதியாக நேட்டோ கூட்டமைப்பின் செயலாளர் மார்க் ரூட்டை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதில் கிரீன்லாந்து விவகாரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து இறக்குமதி வரி விதிப்பதாக அறிவித்திருந்தேன் அதனை வாபஸ் பெறுகிறேன் என கூறியுள்ளார்.


trump Greenland Tariff Nato

நேட்டோ செயலாளர் மார்க் ரூட்டை சந்தித்து பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தேன். ஆக்கப்பூர்வமான முறையில் இந்த பேச்சுவார்த்தை இருந்தது எனக் கூறியிருக்கிறார். கிரீன்லாந்து விவகாரத்தில் எதிர்கால ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.

என்னப்பா டிரம்ப்.. கிரீன்லாந்துக்கும், ஐஸ்லாந்துக்கும் வித்தியாசம் தெரியலையே.. இதுல கைப்பற்றும் ஆசை வேற..!!

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் போது அமெரிக்காவிற்கும் அனைத்து நேட்டோ நாடுகளுக்கும் மிகச் சிறந்த ஒரு ஒப்பந்தமாக இது இருக்கும் என தெரிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது விதிக்கப்படுவதாக அறிவித்திருந்த வரி விதிப்பு அறிவிப்பை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார். கிரீன்லாந்து விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஆகியோர் தொடர்ந்து நடத்துவார்கள் என கூறியிருக்கிறார்.

வெள்ளி விலை உயர்வில் சீனாவின் சதித்திட்டம்..? Rich Dad Poor Dad ஆசிரியர் ராபர்ட் கியோசாகி சொன்ன ரகசியம்..!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீதான வரி விதிப்பு நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கியிருக்கும் டிரம்பின் நடவடிக்கைக்கு டென்மார்க் நாட்டு வெளியூர் துறை அமைச்சர் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். இது ஒரு நேர்மறையான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் போட்டி வரி விதிக்கும் முடிவுகளை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிகிறது.

கிரீன்லாந்து விவகாரத்தில் ராணுவ நடவடிக்கை இல்லை, வரி விதிப்பும் இல்லை என்ற டிரம்பின் அறிவிப்பு இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக வர்த்தக மோதல் இருக்காது என்பதால் இனி முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளை நோக்கி வருவார்கள் எனவே தங்கம், வெள்ளி விலை குறைய வாய்ப்புள்ளது.

Credit: Goodreturns

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+