உயிருக்கு போராடும் பிஞ்சு இதயம்! 5 வயது சிறுமியை காப்பாற்ற உடனே உதவுங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 வயதான சிறுமி திவ்யஸ்ரீ, பிறந்து இரண்டு நாட்களில் இருந்து இதய குறைபாடுடன் உயிர் வாழ்ந்து வருகிறார். தற்போது சிறுமிக்கு 5 வயதாகிறது. ஆனால், இதய பிரச்சினை தீவிரம் அடைந்து இருப்பதால் அவர் உயிர் பிழைக்க உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த சிறுமி, அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். அவளுடன் படிக்கும் சக சிறுமிகள் ஓடியாடி விளையாடுவதை போல திவ்யஸ்ரீயால் செய்ய முடியாது. திவ்யஸ்ரீக்கு இதய குறைபாடு இருப்பதால் மற்ற குழந்தைகளை போல சுறுசுறுப்பாக வெளியில் சென்று விளையாட முடியவில்லை. இது சிறுமியின் கல்வியையும் பாதித்திருக்கிறது.

Divyasree

குழந்தையின் பிரச்சனை தானாகவே சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் காத்திருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. நாளுக்கு நாள் பிரச்சினை மேலும் தீவிரமடைந்து கொண்டே சென்றது. சமீபத்தில் அரசு மருத்துவமனையில் மியாட் மருத்துவமனை நடத்திய இலவச இதய பரிசோதனை முகாமில் பங்கேற்று இருந்த சிறுமி திவ்யஸ்ரீக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சிறுமி டெட்ராலஜி ஆஃப் ஃபாலோட் எனப்படும் தீவிரமான பிறவி இதயக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சிறுமையின் இந்த குறைபாட்டை சரி செய்ய, கார்டியாக் ரிப்பேர் சர்ஜரி எனப்படும் இதை அறுவை சிகிச்சை உடனே செய்யப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

ஆனால் இந்த மருத்துவ செலவுக்கு ரூ.3.25 லட்சம் ஆகும். சிறுமியின் தந்தை சுதாகர் சாதாரண தின கூலியாக கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். வேலை இருக்கும் நாள் நாட்களில் அவருக்கு ரூ.350 வருமானம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய மருத்துவ கட்டணத்தை அவரால் நிச்சயம் கட்ட முடியாது.

எனவே சிறுமியின் உயிரைக் காப்பாற்ற, அவர் நம்முடைய உதவியை நாடி இருக்கிறார். நாம் நினைத்தால் சிறுமியை காப்பாற்ற முடியும். நம்மால் முடிந்த சிறிய உதவியை காலதாமதம் இல்லாமல் உடனடியாக செய்வதன் மூலம், சிறுமியின் உயிரை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற முடியும். எனவே சிறுமிக்கு உதவுங்கள்! இன்றே உதவுங்கள்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+