1984-ல் தாம் இறந்ததாக பரவிய வதந்தியை கலகல சிரிப்புடன் எதிர்கொண்ட கருணாநிதி: பேராசிரியர்.மு.நாகநாதன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 3-வது ஆண்டு நினைவு தினம் இன்று. 20 ஆண்டுகாலம் கருணாநிதியுடன் மிக நெருக்கமாக இருந்த பேராசிரியர் மு.நாகநாதன் பகிர்ந்துள்ள நினைவலைகள்:

அரை நூற்றாண்டு அழியா நட்பு

இருபது ஆண்டு நடைப்பயிற்சி

3rd Death Anniversary: Prof. Naganathan shares memories with Karunanidhi

எனக்குக் கிட்டிய அறிவு பயிற்சி
காலம் எனக்கு அளித்த கொடை

ஆட்சியிலிருந்தாலும்
இல்லையென்றாலும்
நாகநாதன் என்னுடன் இருப்பார் எனக் கூறிய நீங்கள் இல்லை!

நான் இருக்கிறேன்
காலையில் விடாமல் நடக்கிறேன் தங்களின் ‌நினைவோடு!

எதைச் சொல்வது!
எதை விடுவது;

1994 ஆம் ஆண்டு
பல்கலைக் கழகத்தில் பணியில் இருக்கிறேன்!

மாலை நான்கு மணிக்குத்
தொலைப்பேசி வழி நண்பர்கள் பலர்

இந்தச் செய்தி உண்மையா!
இல்லை! முழுப்பொய் !

காலையில் நடைப்பயிற்சி இருந்ததா?
ஆம்!

கடைகள் இழுத்து மூடப்படுகின்றனவே!
போதும் போதும் தொல்லை என
விரைகிறேன் வீட்டிற்கு!

வீட்டிலும் தொலைபேசி ஒலிக்கிறது!
ஒலித்தது
கரகரத்த குரல்!

கலைஞரின் குரல்
நான் தான் பேசுகிறேன்!

கேள்விப் பட்டாயா வதந்தியை எனக் கேட்டு,
கல கல எனச் சிரிப்பு!

கோபாலபுரம் இல்லத்திற்கு வருகிறாயா

விரைந்து செல்கிறேன்!

3rd Death Anniversary: Prof. Naganathan shares memories with Karunanidhi

காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனார்
புது தில்லியிலிருந்து நலமா எனக்
கலைஞரிடம் கேட்கிறார்!

ஒட்டும் கேட்கும் தில்லி கூட
வதந்தியை நம்பியதே!

தில்லிக்கு ஆணவம் அதிகம்
அறிவு குறைவு!

நான் கோபாலபுரம் இல்லம் செல்கிறேன்!
உட்காரச் சொல்கிறார் தலைவர்!

ஒலி நாடா ஓடிக்கொண்டிருக்கிறது

கலைஞர் பிறந்தநாளில்
1967 இல் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை!

அன்று நீங்கள் இறந்துவிட்டாதாகப் பரப்பிய வதந்திக்கு அறிஞர் அண்ணா
உரை உங்களுக்கு ஆறுதல் தந்தது!

நீங்கள் இறந்து விட்டீர்கள் 2018 இல்
நாடே கண்ணீர் சிந்தியது

தடைகள் தகர்க்கப்பட்டன
நீதி சொல்லிற்று

நீங்கள் அண்ணாவின் அருமை தம்பி
அண்ணாவோடு இருங்கள் என!

உணர்வின் உச்சத்தில் தங்கள் அன்பு மகன் சிந்திய கண்ணீரைத் தமிழ்நாடே கண்டது!

2021 ஆம் ஆண்டில் தங்கள் மகன் முதல்வர்!

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
என்றல்லவா ஒலித்தது! ஒலிக்கிறது!!

நாடு போற்றும் -நல்லவர் வாழ்த்தும் நல்லாட்சி அல்லவா தொடர்கிறது!

காலம் நடந்து கொண்டே இருக்கிறது!
நாங்களும் நடந்து கொண்டே இருக்கிறோம்
உங்கள் நினைவோடு!

இவ்வாறு பேராசிரியர் மு. நாகநாதன் பதிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+