Paneer Cutlet Recipe: ஆரோக்கியம் நிறைந்த பன்னீர் கட்லட்.. இப்படி செய்து பாருங்க
How to make Paneer Cutlet: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும், ஆரோக்கியம் நிறைந்த பன்னீர் கட்லட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
சைவப் பிரியர்கள், அசைவப் பிரியர்கள் என இரண்டு பேரின் விருப்ப பட்டியலிலும் கட்டாயம் பன்னீர் இடம் பிடித்திருக்கும். பன்னீரில் புரதச் சத்து, கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி12, ஜிங்க் என பல்வேறு சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. பன்னீரில் அதிகளவில் புரதம் உள்ளதால் தசைகளின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவும். உடலில் ஆற்றலின் அளவையும் அதிகரிக்கும்.

பன்னீர் கால்சியம் நிறைந்ததாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி மற்றும் நரம்பு மண்டல ஆரோக்கியத்திற்கு உதவும் பி12 அதிகம் இருப்பதால் மிகவும் நன்மை பயக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஆரோக்கியம் நிறைந்த பன்னீரில் கட்லட் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - இரண்டு
பன்னீர்- 2 பாக்கெட்
குடைமிளகாய் - ஒன்று
தக்காளி - 1 1/2
கறிமசாலா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
கான்ஃபிளவர் மாவு - 5 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த் தூள் - தேவையான அளவு
தக்காளி சாஸ்
குருமிளகுப் பொடி - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
1. பன்னீரை சிறு சிறு துண்டுகளாகவும், குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர், ஒரு பவுலில் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய், பன்னீர் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
3. மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கறிமசாலா தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி வைத்துக் கொள்ளவும். தேவையெனில் குருமிளகுப் பொடி சேர்த்துக் கொள்ளவும்.
4. அதில், பன்னீர் மற்றும் கான்ஃபிளார் மாவையும் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
5. பின்னர், பன்னீர் கலவையை வட்டமாக திரட்டி வைத்துக் கொள்ளவும்.
6. அடுப்பில் கடாயை வைத்து பொறிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். எண்ணெய் சூடானதும் பன்னீர் கலவையை பொட்டு பொறித்து எடுத்தால் சுவை மிகுந்த பன்னீர் கட்லட் தயார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications