Surakkai Chutney recipe: சுரைக்காய் சட்னி செய்தால் எத்தனை தோசை, இட்லி உள்ள போகுதுனே தெரியாது!
Surakkai Chutney recipe (சுரைக்காய் சட்னி): இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள ஒரே விதமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் வைத்து போரடிக்கிறதா? அப்படி என்றால் சுரைக்காய் சட்னியை செய்து பாருங்கள். சுவையாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன செய்வது என்ற யோசனை நம்மில் பலருக்கு உள்ளது. என்னதான் தேங்காய் சட்னி, வேர்க்கடலை சட்னி, சாம்பார், வெங்காய சட்னி என வைத்தாலும் புதிதாக ஏதாவது செய்யலாம், சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

அதிலும் சுரைக்காயை வைத்து கூட்டு, பொரியல் செய்யலாம். உடல் எடை குறைய ஜூஸ் கூட போடலாம். ஆனால் அந்த காயில் ஒரு சூப்பரான சட்னி செய்யலாம் தெரியுமா? எப்படி செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க!
சுரைக்காய்- ஒரு கப்
பச்சைமிளகாய்- 4
பூண்டு பல் -5
இஞ்சி- கால் இன்ஞ் நறுக்கியது
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை- சிறிது
தேங்காய்- கால் கப்
கடுகு- 1 டீஸ்பூன்
செய்முறை
ஒரு மீடியம் சைஸ் சுரைக்காயின் தோலை சீவிக் கொண்டு அதில் உள்ள கொட்டைகளை நீக்கிவிடுங்கள்.
பின்னர் அதை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடத்திற்கு நன்கு வதக்கிவிடவும்.
பின்னர் அதில் நறுக்கிய சுரைக்காயை சேர்க்கவும். உப்பு, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
மூடி விட்டு சுரைக்காய் வேகும் வரை வேகவிடுங்கள்.
நன்றாக ஆறியதும் கால் கப் தேங்காய், தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொட்டவும். இந்த சட்னியை செய்தால் தோசை, இட்லி எத்தனை போனது என தெரியாது! மறுபடியும் முதல்ல இருந்து கோட்டை போடுவதுதான்!
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications