White kuruma recipe: சுடச்சுட கையேந்தி பவன் ஒயிட் குருமா இப்படி செய்து பாருங்க.. அசந்து போவீங்க
White kuruma recipe: இட்லி, தோசைக்கு சாம்பார் சட்னி, பூரிக்கு உருளைக்கிழக்கு மசால், சப்பாத்திக்கு கொண்டைக் கடலை குருமா என செய்து போரடித்துவிட்டதா. இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி என எல்லா வகை டிபன்களுக்கும் டாப் டக்கராக இருக்கும் கையேந்தி பவன் ஒயிட் குருமா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
என்னதான் வீட்டில் சமையல் செய்தாலும் கையேந்தி பவனில் இருக்கும் ருசியே தனி தான்.. இதனை பலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். பெரிய ஹோட்டலில் இல்லாத சுவையைக் கூட ஒரே வகை பிரமாதமான ருசியை பல வருடங்களாக தந்து மக்களின் பேவரைட் பட்டியலில் இடம்பிடித்து வைத்திருப்பார்கள். அந்த வகையில், எல்லா வகையான டிபன்களுக்கும் பொருந்தும் மணமணக்கும் கையேந்தி பவன் ஸ்டைல் ஒயிட் குருமா எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் - 2
பொட்டுக்கடலை - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் தேவையான அளவு
இஞ்சி - 1 சிறிய துண்டு
முழு முந்திரி - 8
பூண்டு - 6 பல்
தேங்காய் சிறிதளவு
பட்டை - 1
கிராம்பு - 4
தக்காளி - 1
சோம்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கல்பாசி சிறிது
கறிவேப்பிலை
செய்முறை
1. ஒரு பெரிய வெங்காயத்தை பெரிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். இன்னொரு பெரிய வெங்காயத்தையும், ஒரு பெரிய தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்,
3. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றவும். எண்ணெய் சூடானதும் பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி, பூண்டு, தேங்காய் துண்டுகள், இஞ்சி, பட்டை, கிராம்பை போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர், சிறிது நேரம் ஆற விடவும்.
4. ஆறிய பின்னர் அந்தக் கலவைகளை சிறிதளவு உப்பு, தண்ணீர் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.
5. அடுப்பில் கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். பின்னர், சோம்பு, பட்டை, கல்பாசி, கிராம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கண்ணாடி போன்று வதக்கவும்.
6. வதங்கியதும் தக்காளி, சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
7. பின்னர், அரைத்து வைத்து விழுதை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொடி வந்ததும்.
பிறகு அரைத்த விழுதுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இறக்கி வைக்கவும்... கமகமன்னு மணக்கும் ஒயிட் குருமா ரெடி..
இந்த ஒயிட் குருமா இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், ஆப்பம், பூரி போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் சூப்பராக இருக்கும். அப்புறம் என்ன உங்க அன்பு குழந்தைக்கும், ஆசை கணவருக்கும் கொடுத்து அசத்துங்க..












Click it and Unblock the Notifications