விஜயவாடாவில் விஜய் தரிசித்த கனகதுர்க்கை கோயிலின் சிறப்புகள் என்ன? தேச மங்கையர்க்கரசி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திரா மாநிலம், விஜயவாடா சென்ற போது முதல்வர் விஜய் தரிசனம் செய்த கனகதுர்க்கை கோயிலின் சிறப்புகள் குறித்து ஆன்மீக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.

இதுகுறித்து அவர் நியூஸ் தமிழ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: துர்க்கை என்றாலே வெற்றியை தரக் கூடியவள் என அர்த்தம். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல, மகத்துவமான வெற்றியை தரக் கூடியவள். துர்க்கம் என்றால் அரணாக இருந்து நம்மை காக்க கூடியவள் என்பதால் அவளுக்கு துர்க்கை என்ற பெயர் உண்டு.

spirituality kanaga durga

இந்த நவராத்திரி காலத்தில் அசுரர்களை சம்ஹாரம் செய்ய வேண்டும் என்பதற்காக அம்பாள் தவம் செய்து வெற்றி பெற்ற திருநாளை எப்படி கொண்டாடுகிறோமே, அப்படி கொண்டாடும் அந்த சக்திக்கு பெயர்தான் துர்க்கை. அந்த துர்க்கைதான் மகிஷாசுர மர்த்தினியாக சம்ஹாரமும் செய்கிறாள்.

அந்த துர்க்கையை தங்க மயமான துர்க்கையாக தரிசனம் செய்ய வேண்டும் என்றால் கனகதுர்கா என்ற பெயரில் அம்பாள் எழுந்தருளியுள்ள திருத்தலத்தில் தரிசிக்கலாம். கனகம் என்றால் தங்கம். பொன்மயமாக விளங்குகிற துர்க்கை வாழ்க்கையில் எல்லாவிதமான வெற்றிகளையும் எல்லா நேரங்களிலும், எல்லா காலங்களிலும் நமக்கு தரக் கூடியவள். தற்போது நவராத்திரி காலமாக இருக்கிறது.

நவராத்திரி நிறைவு நாள்

அதிலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நவராத்திரியின் நிறைவு நாளாக துர்க்கையை வழிப்படக் கூடிய 3-ஆவது நாளாகவும் இந்த நாள் அமைந்துள்ளது. நவராத்திரியின் 9 நாட்களை மூன்று, மூன்றாக பிரித்தால் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கு உரியது.

வெற்றிக்கு வித்திடும் அன்னை

வாழ்க்கையில் வெற்றி வேண்டும். வெற்றி இல்லாமல் நாம் எதையும் செய்ய முடியாது. வெற்றியையே தரக் கூடிய அற்புதமான தெய்வமாக, எல்லோருக்கும் வாழ்க்கையில் வேண்டிய வரத்தை அளிக்கக் கூடியவள்தான் விஜயவாடாவில் கனகதுர்கா என்ற நாமத்துடன் எழுந்தருளியுள்ள துர்க்கை. இவ்வாறு தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற தமிழக முதல்வர் விஜய், கனகதுர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று தரிசித்தார். இந்த கோயில் இந்திரகிலாத்ரி எனும் மலையின் மீது அமைந்துள்ளது.

8 கரங்கள்

இங்குள்ள அன்னை சுயம்புவாக தோன்றியவள். மூலஸ்தானத்தில் அன்னை 8 கரஙகளுடன், ஒவ்வொரு கரங்களிலும் வெவ்வேறு ஆயுதங்களை ஏந்தி மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள்.

51 சக்தி பீடம்

துர்க்கை சன்னதியின் மேல் பகுதி தங்கக் கூரையால் வேயப்பட்டிருக்கிறது. 51 சக்தி பீடங்களில் முக்கியமானது. கீலா என்ற யட்சன், துர்க்கையின் அருளை பெற தீவிர தவம் செய்தான். அப்போது அவன் முன்பு தோன்றிய தேவி, "என்ன வரம் வேண்டும்" என கேட்டாள். அதற்கு அவனோ "என் தலையில் தேவி எப்போது அமர்ந்திருக்க வேண்டும்" என்றான்.

யட்சன்

இதையடுத்து யட்சனின் விருப்பப்படி, தேவி வரம் தர கீலன் மலையாக மாற, மலை மீது தேவி குடியேறினாள். ஆதி சங்கராச்சாரியாரால் இந்த தலம் வழிபடப்பட்டது. உக்கிரமாக இருந்த தேவியின் சக்தியை சாந்தப்படுத்த இங்கு ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டுள்ளது.

தசரா திருவிழா

இங்கு ஆண்டுதோறும் தசரா திருவிழா உலக புகழ்பெற்றது. விஜயதசமி நாளில் கிருஷ்ணா நதியில் பிரம்மாண்டமாக நடைபெறும் தெப்ப உற்சவத்தில் அம்மன் மிதக்கும் படகில் பவனி வருவாள். சபரிமலை, மேல்மருவத்தூரை போல இந்த கோயிலுக்கும் பக்தர்கள் மாலை அணிந்து வந்து அம்மனை தரிசிக்கிறார்கள்.

ஆந்திர மாநிலத்தின் காவல் தெய்வமாகவும் போற்றப்படுகிறாள். அரசியல் தலைவர்கள் , முக்கிய பிரமுகர்கள் தங்களின் வெற்றிக்காக வந்து வழிபடும் மிக முக்கியமான தலம் இதுதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+