70000 டின்களில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம்.. உயிரோடு விளையாடலாமா? பழனியில் பக்தர்கள் அதிர்ச்சி
திண்டுக்கல்: பழனியில் கெட்டுப்போன பல ஆயிரம் டின்களில் இருந்த பஞ்சாமிர்தத்தை குழி தோண்டி புதைத்து அழித்தனர்.
பழனி முருகன் கோவிலில் கெட்டுப்போன பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவற்றை அகற்ற உத்தரவிட்டனர்.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.
மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். மலைக்கோயில் அடிவாரத்தில் பாதவிநாயகர் இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது என்பது நம்பிக்கை.
மலைமேல் உள்ள தண்டாயுதபாணி மூலவர் நவபாஷனத்தினால் உருவாக்கப்பட்டவர். இதனை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற சித்தர். பழனி தண்டாயுதபாணி சிலையை போகர் செய்வதற்கு 9 ஆண்டுகள் ஆனதாம். அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று சேகரித்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி சிலையாக உருவாக்கினர்.
இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாம். தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும்.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட நவபாஷாண சிலை மீது அபிஷேகம் செய்து எடுக்கப்படும் விபூதி சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாத பொருட்களை உண்ணும் பக்தர்களுக்கு எவ்வித நோயும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பல்வேறு நோய்களை நீக்கும் தன்மை கொண்ட அபிஷேக பஞ்சாமிர்தம் இங்கு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன், ஏலக்காய், கற்கண்டு, பேரிச்சை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு, பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இதில், சிறிதளவுகூடத் தண்ணீர் சேர்க்கப்படாது. இதனால், பஞ்சாமிர்தம் பாகு நிலையுடன் சுவையானதாக மாறுகிறது. மேலும், கெட்டுப் போகாமல் இருக்க செயற்கையாக எந்த வேதிப்பொருட்களும் இதில் கலக்கப்படுவதில்லை. இது, இந்திய அரசின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
பழனிக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்வார்கள். பழனி என்றாலே அங்கிருக்கும் முருகனும் பஞ்சாமிர்தமும்தான் நினைவுக்கு வரும். பழனிக்குப் போகிறவர்கள் குறைந்தது ஒரு டப்பா பஞ்சாமிர்தத்தை யாவது வாங்காமல் வரமாட்டார்கள். மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் விளையக்கூடிய ஐந்து வகையான பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பழனி பஸ்நிலையம், அடிவாரம், மின்இழுவை ரயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் என பல்வேறு இடங்களில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு டப்பா, டின் என இரண்டு வகைகளில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் கோவிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட பிரசாதம் கெட்டுப்போய் இருந்ததாக பக்தர்கள் புகார் கூறினார். லட்டு, முறுக்கு ,அதிரசம் உள்ளிட்ட பிரசாதங்கள் கெட்டுப்போன நிலையிலும் விற்பனை செய்யப்பட்டதாக பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பிரசாதம் வாங்கிய பக்தர்களுக்கு கடையின் உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கொடுத்தனர்.
கெட்டுப்போன பஞ்சாமிர்தம் விற்பனை செய்யபட்ட விவகாரத்தில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், உணவு பாதுகாப்பு துறையினர் பிரசாத கடைகளில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வக பரிசோதனைக்கு மாதிரி பிரசாதங்களை எடுத்துச் சென்றனர். பஞ்சாமிர்தம் தயாரிப்பு கூடம் வளாகத்தில் உள்ள பிரசாதங்கள் தயாரிக்கும் இடங்களில் சென்று பிரசாத பொருட்களில் முறையான பேப்பர்களை பயன்படுத்த வேண்டும், எண்ணெய் பொருட்களை வடிகட்டி பயன்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கி சென்றனர்
கெட்டுப்போன பிரசாதங்களை விற்பனை செய்து தங்களின் உயிருடன் விளையாடவேண்டாம் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், இன்றைய தினம் பழனியில் கெட்டுப்போன நிலையில் 70000 டின்களில் இருந்த பிரசாதங்கள் அழிக்கப்பட்டன. கள்ளிமந்தையத்தில் உள்ள கோசாலை அருகே குழி தோண்டி கெட்டுப்போன பஞ்சாமிர்த டின்களை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புதைத்தனர்.
பிரசாதங்களை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் விற்பனை செய்ய வேண்டும். காலாவதியான பிரசாதங்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications