பழைய அகல் விளக்கை இப்படி யூஸ் பண்ணுங்க.. அகல் விளக்கு உணர்த்தும் நிஜம்.. வீட்டில் தங்கும் மகாலட்சுமி
சென்னை: விளக்குகளில் முதன்மையானது என்று அகல் விளக்குகளை ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? மனித வாழ்வில் அகல் விளக்குகள் உணர்த்தும் தத்துவம் என்ன? பழைய அகல் விளக்குகளை என்ன செய்யலாம்? இதோ இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
நாம் எந்த கடவுளுக்கு தீபம் ஏற்றினாலும், அகல் விளக்கில் தீபம் ஏற்றுவதே மகிமை என்கிறார்கள். மகாலட்சுமி, சரஸ்வதி தேவி, பார்வதி தேவி என முப்பெருந்தேவியர் இந்த அகல்விளக்கில்தான் உறைந்திருக்கிறார்கள்..

எனவே, இதில் தீபம் ஏற்றும்போது, மகாலட்சுமி வீட்டிற்குள் எழுந்தருள்வாள் என்பது நம்பிக்கையாகும்.. அதுமட்டுமல்ல, இந்த விளக்கின் அடிபாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் மகாவிஷ்ணுவும் நெய் அல்லது எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கிறார்கள்.
பஞ்சபூதங்களும் அகல்விளக்கும்
இன்னொரு காரணமும் உண்டு.. களிமண்ணில் தண்ணீரை ஊற்றி, சூரிய வெளிச்சத்தில் அதை காய வைத்து, காற்றின் உதவி கொண்டு நெருப்பிலிட்டுதான், அகல் விளக்குகள் செய்யப்படுகின்றன.
அதாவது மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐம்பூதங்களை கொண்டு, தயாராவதே அகல் விளக்குகள் .. எனவே, இந்த அகல் விளக்கில் தீபம் ஏற்றுவது, அம்பாளுக்கு பிடித்தமான ஒன்று. அதுமட்டுமல்ல, அகல் விளக்கை வாங்குவதால், இதை விற்பனை செய்யும் ஏழைக்குடும்பங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இது புண்ணியமாகும்.
அகல்விளக்கு உணர்த்தும் தத்துவம்
அதேபோல அகல் விளக்கில் ஏற்றுவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.. அகல் விளக்கு என்பது சூரியனை குறிக்கிறது.. அதில் ஊற்றப்படும் நெய் / எண்ணெய், சந்திரனை குறிக்கிறது.. விளக்கில் போடப்படும் திரி, புதன் ஆகும்.. அதில் எரியும் ஜுவாலையே செவ்வாய் எனப்படும்.. ஜுவாலையின் நிழல் ராகுவை குறிக்கிறது.. அந்த ஜூவாலையின் மஞ்சள் நிறம் குருவை குறிக்கிறது. ஜூவலை எரிந்து அணைந்தவுடன் மிச்சமுள்ள கரி, சனியை குறிக்கிறது.. வெளிச்சம் பரவும் ஞானமே கேது எனப்படுகிறது. திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது ஆசையை குறிக்கும் சுக்கிரன் ஆகும்.
அதாவது, ஒருவர் ஆசையை குறைத்துக்கொண்டால் சுகம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம். நம்மை அழிக்க செய்வதே ஆசைகள்தான்.. மோட்சம் கிடைக்காமல் நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்க செய்வது கர்மா.. இதுவே அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் ஆகும்.
பழைய விளக்குகளை எப்படி சுத்தம் செய்வது
எனவே, அகல் விளக்குகள் பழையதாகிவிட்டாலும், அதை சுத்தம் செய்து, மீண்டும் விளக்கேற்றலாம். இதற்கு பழைய அகல் விளக்குகளை சுடுநீரில் போட்டு, துணி துவைக்கும் சோப்பை கொட்டி ஊறவைக்கும். பிறகு இதனை நன்றாக தேய்த்து கழுவி காயவைக்கலாம்.
அல்லது ஒரு பழைய தோசை கல்லை கேஸ் ஸ்டவ்வில் வைத்து சூடுசெய்து, அநத தோசை கல்லுக்கு மேலே பழைய அகல்விளக்குகளை எல்லாம் கவிழ்த்து வைக்க வேண்டும்.
தோசைக்கல்லுடன், அகல் விளக்கும் சேர்ந்து சூடானதும், அடுப்பை அணைத்துவிட வேண்டும. இந்த சூட்டிலேயே மண் அகல் விளக்கில் இருக்கும் எண்ணெய் எல்லாம் வெளியேறிவிடும். பிறகு, ஒரு துணியை வைத்து துடைத்தெடுத்துவிடலாம். இதற்கு பிறகு, சுடுநீரில், துணிதுவைக்கும் பவுடரை கொட்டி, மண் அகல் விளக்குகளை ஊறவைத்து கழுவி, வெயிலில் காயவைக்கலாம். இது ஒருவருடம்வரை பத்திரமாக இருக்கும்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications