தங்கம் சேரும் தனத்திரயோதசி..எந்த ராசிக்காரர்களுக்கு தலைமுறைக்கும் செல்வம் சேரும்?
சென்னை: தனத்திரயோதசி, தந்தேரஸ் நாட்களில் எந்த ராசிக்காரர்கள் தங்க நகை வாங்கினால் பல தலைமுறைக்கும் செல்வம் சேரும் பெட்டி பெட்டியாக தங்க நகை சேரும் என்று பார்க்கலாம்.
தனத்திரயோதசி: தீபாவளி பண்டிகை வட இந்தியாவில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தமிழகத்தில் ஒரே நாளில் முடிந்து விடுகிறது. தன திரயோதசி, தீபாவளி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை செய்தால் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். வரும் வெள்ளிக்கிழமை தனத்திரயோதசி, தன்வந்திரி பகவானை வணங்கி பூஜை செய்ய நல்ல நாளாகும். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கை.

தங்கம் வாங்க நல்ல நாள்: தந்தேஸ் எனப்படும் தனத்திரயோதசி நாளில் லட்சுமி குபேர பூஜை செய்ய வீட்டில் செல்வ வளம் பெருகும். அக்ஷய திரிதியை நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும் என்பது நம்பிக்கை. இதே போல ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் திரயோதசி தனத்திரயோதசியாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் வாங்கும் பொருட்களும் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. தந்தேரஸ்' என வட இந்தியாவில் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு வரும் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை தந்தேரஸ் எனப்படும் தனத்திரயோதசி கொண்டாடப்படுகிறது.
பண முதலீடு: பாற்கடலில் இருந்து அமிர்தம் வேண்டி கடைந்த போது அனைத்து செல்வங்களுடன் லட்சுமி தேவி அவதரித்தார். தனதிரயோதசி நாளில் தங்கம், வெள்ளி, வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் வாங்கலாம். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும். பங்குச்சந்தைகளிலும் முதலீடுகள் செய்யலாம்.
சகோதர பாசம்: தன திரயோதசி தினத்தில்தான் யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க யமுனையும் மனம் மகிழ்ந்து, தனது சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள். இத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களைச் சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகிறார்கள். சகோதர பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை, எமனுக்குப் பிடித்த விழா என்று புராணங்களும் போற்றுகின்றன.
என்ன வாங்கலாம்: தனத்திரயோதசி நாளில் விலை உயர்ந்த பொருட்கள் வாங்க முடியாதவர்கள் கல் உப்பு, மஞ்சள், பச்சரிசி, சர்க்கரை, கஸ்தூரி மஞ்சள் நவதானியங்கள் வாங்க வேண்டும். அரிசி அல்லது நெல், கோதுமை, பாசிப்பயறு, துவரை, மொச்சை, எள், கொள்ளு, உளுந்து, வேர்க்கடலை போன்ற நவதானியங்களை வாங்கலாம். லட்சுமி குபேர பூஜைக்கு தேவையான பச்சை குங்குமம், பச்சை கயிறு லட்சுமி குபேரர் காசுகள், லட்சுமி குபேரர் சிலை அல்லது படம் வாங்கலாம். இந்த நாளில் வாங்கும் பொருட்கள் பெருகும்.
மேஷம்: தனத்திரயோதசி மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான நாள். இந்த நாளில் நவ கிரகங்களும் சாதகமான இடத்தில் உள்ளன. ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், ராசியில் குரு, லாப வீட்டில் சனி, ஆறாம் வீட்டில் சுக்கிரன் கேது என கிரகங்கள் இணைந்துள்ளதால் வீட்டில் மகிழ்ச்சியும் செல்வ வளமும் உண்டாகும். இந்த தீபாவளி முதல் உங்களின் நிதி நிலை சிறப்படையும். வீட்டில் ஆனந்தம் அதிகரிக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கு இதுநாள் வரை இருந்த தடைகள் நீங்கும். தங்க நகை வாங்க தலைமுறைக்கும் செல்வம் சேரும்.
மிதுனம்: ராசிதான் கை ராசிதான் என்று பாடப்போகிறீர்கள். உங்களின் லாப ஸ்தானம், பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்ய ஸ்தானம் சிறப்பாக உள்ளது. அங்குள்ள கிரகங்கள் உங்களுக்கு லாபத்தை அள்ளித்தரப்போகின்றன. வாழ்க்கை சுபிட்சமடையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். சமுதாயத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்க நல்ல நாள்.
சிம்மம்: தனத்திரயோதசி நாள் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமைந்துள்ளது. மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். குருபகவானின் பார்வை கிடைப்பதால் தீபாவளி நாளில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். முன்னோர்கள் சொத்துக்களால் பண வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். தங்க நகைகளை வாங்க தங்கமான நாள்.
கும்பம்: உங்கள் ராசியில் சனி பகவான், மூன்றாம் வீட்டில் குரு, பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியன், செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்வதால் அதிர்ஷ்டகரமான நாளாக அமைந்துள்ளது. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். வேலை, தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்.
செல்வம் பெருகும்: வீட்டில் வரவு செலவு கணக்கை முறையாய் வைத்திருப்போருக்குக் கணக்கின்றி செல்வம் வழங்க வேண்டும்! என்பது தெய்வச் சட்டம். கணக்கு வைத்து வாழுங்கள். கணக்கின்றிச் செல்வம் குவியும். தன திரயோதசி நாளிலும் தீபாவளி திருநாளில் மகாலட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும். நவம்பர் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் 6.30 மணிக்கு மேல் 8 மணி வரை தன திரயோதசி நாளில் கஸ்தூரி மஞ்சள் வைத்து பூஜை செய்து வழிபட்டு தீபாவளி நாளில் மகாலட்சுமி பூஜை செய்து அந்த மஞ்சளில் நமது பணம் வைத்து புழங்கும் பீரோவில் வைக்க ஏழு தலைமுறைக்கும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications