For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீராத நோய்களும் திசை தெரியாமல் போகும்..இந்த பரிகாரத்தை செய்தால்..ஆரோக்கியம் தேடி வரும்

Google Oneindia Tamil News

மதுரை: நோய்களுடன் கோடீஸ்வரனாக வாழ்வதை விட ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக மன நிம்மதியாக வாழ வேண்டும் என்றுதான் பலரும் ஆசைப்படுவார்கள். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறியுள்ளனர். ருணம், ரோகம், சத்ரு மூன்றும் இல்லாதவன் நிம்மதியான மனிதன். நோய்கள் நீங்க நாம் சில ஆன்மீக பரிகாரங்களைச் செய்யலாம்.

இறைவனை நம்பிக்கையுடன் வணங்கினால் நோய்களில் இருந்து முழுவதுமாக விடுபட்டு நல்ல முறையில் வாழலாம். எனவேதான் இன்றைக்கு கோவில்களில் மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. நோய் வந்து விட்டதே என்று அச்சப்படாமல் அதற்குரிய கடவுள்களை வணங்குவதோடு மருத்துவமனைக்கு சென்று நம்பிக்கையுடன் மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றினால் நோய்களில் இருந்து விடுபடலாம்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்கான மருந்துகளை உட்கொள்வதோடு இறை வழிபாடு செய்வது உடலிலும், மனதிலும் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கி சீக்கிரம் நோய்களை குணப்படுத்த உதவுகிறது. நோய்கள் வந்த பிறகு அதற்கான மருந்துகளை உட்கொள்வதை விட, நோய்களே ஏற்படாமல் தடுத்துக் கொள்வதே சிறந்த வழிமுறையாகும். உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும் போது அதற்கான மருந்துகளை உட்கொள்வதோடு இறை வழிபாடு செய்வது உடலிலும், மனதிலும் நேர்மறையான அதிர்வுகளை உண்டாக்கி சீக்கிரம் நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

கல் உப்பு

கல் உப்பு

உடலில் தீராத நோய்கள் இருந்தால், அதற்காக மருத்துவரிடம் சென்று அந்த நோய் தீருவதற்காக சிகிச்சைகளை மேற்கொண்டு இருந்தால், நீங்கள் அம்மன் வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும். அதாவது செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமை தினத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சென்று உங்கள் கையாலேயே நல்லெண்ணெய் தீபம் ஏற்றி விட்டு கல் உப்பை கொட்டி வர, உங்களது உடலில் இருக்கும் நோய்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். உப்பு கரைவது போல உடம்பில் உள்ள நோய்களும் கரைய ஆரம்பிக்கும்.

நெல்லிக்காய் பரிகாரம்

நெல்லிக்காய் பரிகாரம்

நெல்லிக்காய் என்பது இயற்கையிலேயே ஒரு மருத்துவ குணம் மிக்க ஒரு கனி. அது உயிர்காக்கும் கனி.
பூஜை அறையில் இருக்கும் உங்கள் குல தெய்வத்தின் படம் அல்லது இஷ்ட தெய்வத்திற்கு மலை நெல்லிக்காயை நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும். வழிபாடு முடிந்ததும் அந்த மலை நெல்லிக்காயை தெய்வ பிரசாதமாக சாப்பிட்டு வரவேண்டும். குல தெய்வத்தின் அருள் கிடைப்பதோடு உங்களின் நோய்கள் சீக்கிரம் குணமடையும். லட்சுமிதேவியின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.

பழனி முருகன் சந்தனம்

பழனி முருகன் சந்தனம்

பழனி முருகப்பெருமானை காலை 4.00 மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அந்த சமயத்தில், கோவிலுக்கு வருகை தரக்கூடிய பக்தர்களுக்கு சந்தனத்தை பிரசாதமாக கொடுப்பார்கள். அந்த சந்தனத்தை எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். அதில் இருந்து ஒரு சொட்டு சந்தனத்தை எடுத்து தண்ணீரில் கலந்து பருகி விட வேண்டும்.இப்படி செய்தாலும் நம் உடம்பில் நோய் நொடிகள் அண்டாது என்பது நம்பிக்கையாகும்.

சிவனுக்கு பால் அபிஷேகம்

சிவனுக்கு பால் அபிஷேகம்

சிவனுக்கு பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வதன் மூலம் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறலாம். காராம்பசுவின் பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் குஷ்டம் கூட குணமாகும் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

கண் நோய் தீர பரிகாரம்

கண் நோய் தீர பரிகாரம்

கண் நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையில் சூரியனை வழிபடுவது சிறப்பு. ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து சிவாலயத்தில் சுவாமியின் வலப்புறத்தில் இவருக்கு சந்நிதி இருக்கும். நவக்கிரக மண்டபத்திலும் வீற்றிருப்பார். இவருக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம். ஞாயிற்றுகிழமையன்று, காலையில், குளித்து முடித்து, சூரியனை வணங்கி, அகஸ்திய முனிவர் அருளிய, 'ஆதித்யஹிருதயம்' ஸ்லோகத்தை பாராயணம் செய்தால், உடல் நலம் மேம்படும்.கண் நோய் பிரச்னைகள் நீங்கும்.

English summary
Theeratha noi theerum parikaram in tamil:( தீராத நோய் தீர்க்கும் எளிய பரிகாரம்) Many people would rather live a healthy, happy and peaceful life than living as a millionaire with diseases. That is why our forefathers have said that a disease free life is wealth without loss. A peaceful man is one who does not have runam, disease or enemy. We can do some spiritual remedies to get rid of diseases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X