திருநெல்வேலியில் ஒரே அதிசயம்.. நெல்லை ஆற்றில் கெத்தாக நிற்கும் குறுக்குத்துறை முருகன்! செம ஆச்சரியம்
திருநெல்வேலி: முருகன் கோயில் என்றாலே மலைகளுக்கு நடுவேதான் அமைந்திருக்கும்.. ஆனால், தண்ணீரில் அமைந்த கோயில் பற்றி தெரியுமா? அதுவும் வருஷத்துக்கு ஒருமுறை தண்ணீரில் மறைந்து தோன்றும் அதிசய முருகன் கோயில் பற்றி தெரியுமா?
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுக்கு நடுவே அமைந்துள்ளது இந்த முருகன் கோயில்.. 300 வருடம் பழமையும், பெருமையும் கொண்டது.. குறுக்கு துறை என்ற பகுதியில் அமைக்கப்பட்டதால், இந்த கோயில் குறுக்குத்துறை முருகன் கோயில் என்றே அழைக்கப்படுகிறது.

சேதம்: கோயிலின் ஸ்தூபி கல்லால் ஆனது என்பதால் சேதம் என்பதே கிடையாது.. முழுக்க முழுக்க பாறைகளை செதுக்கி கட்டப்பட்ட கோயிலாகும்.. இந்த பாறைகள் தெய்வங்களின் உருவங்களை செதுக்குவதற்கு ஏற்றதாகவே இருந்ததாம்.. அதனால், சிற்பிகள் இந்த பாறைகளுக்கு உருவங்களை தந்தார்களாம்.. அதுமட்டுமல்ல, இந்த பாறையிலிருந்துதான் திருச்செந்தூரில் இருக்கும் முருகன் சிலையும் வடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஆற்றில் கோயில் அமைந்துள்ளதற்கு காரணம், இந்த கோயிலின் முருகன் இங்கு சுயம்புவாக தோன்றியதால்தான், அந்த இடத்திலேயே கோயில் கட்டப்பட்டுள்ளது..
ஆற்றின் கோயில்: அதனால், ஆற்றில் வெள்ளம்வரும்போதெல்லாம் இந்த கோயிலுக்கு மட்டும் எந்தவிதமான சேதமும் ஏறபடுவது கிடைதாது. அந்த அளவுக்கு அந்த காலத்திலேயே சரியான திட்டமிடலுடன் கட்டியிருக்கிறார்கள். குறிப்பாக, கோயிலின் முன்பகுதியில், கூர்மையான முனையில் வடிவமைத்திருப்பால், வெள்ளம் வந்தாலும், இந்த முனையை தாண்டி தண்ணீர் சிதறி ஓடிவிடும்.

அதேசமயம், 40,000 கன அடி தண்ணீர் வெள்ளம் வந்தாலும், உற்சவர் சிலை, சப்பரங்கள், உண்டியல் போன்றவை மட்டும் கரையிலிருக்கும் மேல்கோயிலில் கொண்டுவந்து வைக்கப்பட்டுவிடும்.. வெள்ளம் வடிந்தபிறகு கோயிலை சுத்தம் செய்து, மறுபடியும் உற்சவர் சிலையை கொண்டு வந்து வைப்பார்கள்.
வெள்ளம்: இந்த கோவிலில் இங்கு வைகாசி விசாகம் திருவிழாவும், சித்திரை திருவிழாவும் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.. நம் மனதில் என்ன நினைத்தாலும், இந்த முருகனிடம் பக்தியோடு உருகிவேண்டும்போது அத்தனையும் நடக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications