இதை கவனிக்காம இருந்துட்டோமே..சூரிய அஸ்தமனத்திற்குப் பின் இந்த செயல்களை மட்டும் செய்யாதீங்க!
சென்னை: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டில் விளக்கேற்றிய பின்னர் சில காரியங்களை செய்யக்கூடாது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகள் நமக்கு பணப்பிரச்சினையை ஏற்படுத்தி விடும். பொருளாதார சிக்கலை ஏற்படுத்தக்கூடிய செயல்கள் என்னென்ன? சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு என்னென்ன காரியங்கள் செய்யக்கூடாது என்றும் பார்க்கலாம்.
வீட்டில் விளக்கேற்றும் நேரம் மாலை நேரம். சூரியன் மறைந்த பின்னர் வீட்டில் வெளிச்சத்திற்காக லைட் போட்ட நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றுவார்கள். நம் வீட்டிற்கு வரும் மகாலட்சுமியை வரவேற்கும் விதமாக விளக்கேற்றி வைப்பார்கள்.
மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்கு வரும் போது நாம் தூய்மையாக இருக்க வேண்டும். விளக்கேற்றிய பிறகு தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூடாது...தலை சீவக்கூடாது..குளிக்கக்கூடாது வீடு துடைக்கக் கூடாது என்று சில செயல்களை சொல்லி வைத்திருக்கின்றனர். இன்னும் என்னென்ன செயல்களை மறந்தும் செய்யக்கூடாது என்று தெரிந்து கொள்வோம்.

மாலையில் தூங்க வேண்டாம்
பொதுவாக பகல் நேரங்களில் தூங்கக் கூடாது என்று சொல்வார்கள். வயதானவர்கள்.. நோயாளிகளுக்கு அது விதி விலக்கு. மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உறங்கக் கூடாது. விளக்கேற்றும் நேரத்தில் உறங்கினால் நோய் பாதிப்பு ஏற்படும். மகாலட்சுமி நம்முடைய வீட்டிற்குள் வரும் நேரத்தில் நாம் கதவை பூட்டிக்கொண்டு உறங்கினால் லட்சுமி தேவி வருவது தடைபட்டு விடும். செல்வ வரவும் நின்று போகும்.

மகாலட்சுமியின் கோபம்
மகாலட்சுமி செல்வத்திற்கு அதிபதி. அவரை வரவேற்கும் விதமாக வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் வீட்டில் விளக்கேற்றிய பிறகு வீடு கூட்டி பெருக்கவோ, துடைப்பதோ கூடாது. மாலை நேரத்தில் வீடு துடைத்தால் நேர்மறை சக்தி வெளியேறி எதிர்மறை சக்தி குடியேறி விடும்.

வாசல்படியில் அமராதீர்கள்
பொதுவாக தலைவாசல்படியில் உட்காருவது நல்ல விசயமல்ல. வீட்டில் இருக்கும் இல்லத்தரசியோ, ஆண்களோ மாலை நேரத்தில் வாசற்படியில் அமர்ந்தால் அது செல்வ வரவுக்கு தடையை ஏற்படுத்தி விடுமாம். எனவே மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாகி விடாமல் இருங்கள்.

துளசியை பறிக்காதீர்கள்
துளசி செடி புனிதமானது. துளசி செடி இருக்கும் வீட்டில் செல்வம் பெருகக் கூடும். தூய்மையானவர்கள்..நல்ல எண்ணம் கொண்டவர்கள் வீட்டில்தான் துளசி செடி அதிகம் வளரும். சாஸ்திரங்களின் படி ஏகாதசி நாளில் துளசியை பறிக்கக்கூடாது. அதே போல சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு துளசி செடியை பறிக்காதீர்கள். இதனால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

இதை தானமாக தர வேண்டாம்
பால், தயிர், உப்பு எல்லாமே மகாலட்சுமியின் அம்சம். இந்த பொருட்களை நாம் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில்
இரவல் தரக்கூடாது. குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டில் விளக்கேற்றிய பிறகு பால், தயிர், உப்பு கொடுக்கக்கூடாது. இதன் மூலம் பொருளாதார சிக்கல் ஏற்படும். செல்வந்தராக இருந்த வீட்டில் கூட வறுமை ஏற்படக்கூடும். மகாலட்சுமியின் அருளைப் பெற நீங்கள் வீட்டில் விளக்கேற்றிய பிறகு பூஜை செய்து வணங்குங்கள். செல்வம் நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்கும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications