லாட்டரி டிக்கெட்லாம் வாங்க தேவையில்லை! 2025க்குள்ள இந்த ராசிக்காரங்கலாம் கோடீஸ்வரர்கள்தான்!
சென்னை: 2025 ஆம் ஆண்டுக்குள் கோடீஸ்வரராக்கும் குபேர யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு இருக்கிறது தெரியுமா?
சும்மாவா சொன்னார்கள் குரு பார்க்க கோடி நன்மை என! இருக்கும் ராசிகளில் அனைத்தையும் அள்ளி தருபவர் குரு பகவான். இவரை தட்சிணாமூர்த்தி என்பார்கள், இவருக்கு உகந்த நாள் வியாழக்கிழமை. இவருக்கான தானியம் கொண்டை கடலை

ஆண்டுதோறும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குரு பகவான் பயணம் செய்து கொண்டே இருப்பார். ஒருவரது ஜாதகத்தில் கிரகத்தின் நிலையைப் பொருத்து அவரது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.
கிரகங்களிலேயே சிறப்பாக கருதப்படுவது வியாழக்கிழமை. ஜாதகங்களில் குரு வலுவாக இல்லாவிட்டால் அந்த நபரது வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும். குருபலன் இல்லாமல் ஒருவர் எதுவும் செய்ய முடியாது. அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மே 1 ஆம் தேதி முதல் குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பிரவேசித்தார்.
இத்துடன் அடுத்த வருடம் அடுத்த ராசிக்கு இடம் பெயர்வார். ஒவ்வொரு ராசியாக பிரவேசித்து கிட்டதட்ட 12 ஆண்டுகள் கழித்து குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஆண்டு வரை பண பிரச்சினையே இருக்காது.
சிம்ம ராசி: குபேர யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையை தரும். தொழில் துறையில் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பண பற்றாக்குறையால் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.
கன்னி ராசி: அது போல் கன்னி ராசிக்கும் குபேர யோகம் உண்டாகும். பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் புரோமோஷன் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல நேரிடும்.
ரிஷப ராசி: அது போல் ரிஷப ராசிக்கு குரு பகவான் வந்துள்ளதால் குபேர யோகம் கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் நிதி நிலை சீராகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும்.
மகர ராசி: குபேரனுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களாவர். அவருடைய ஆசி எப்போதும் இவர்களுக்கு உண்டு. வாழ்க்கையில் எந்த பிரச்சினை இருந்தாலும் அதை உறுதியோடு எதிர் கொள்வீர்கள். வெற்றி உங்களை எப்போதும் தேடி வரும். வாழ்க்கையில் பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
விருச்சிக ராசி: விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் புத்திலாயாவார்கள். வித்தியாசமான விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். முன்னேற்றத்தை நோக்கியே பயணிப்பீர்கள். திட்டமிட்டபடி அனைத்து செயல்களையும் செயல்படுத்துவீர்கள். அதனால் உங்களுக்கு வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். சேமிப்பும் அதிகரிக்கும். பணத்திற்கு எந்த குறையும் இருக்காது.
துலாம் ராசி: இந்த ராசியினர் கடின உழைப்பாளிகள். எப்போதும் புத்திசாலித்தனமாக சிந்திப்பார்கள். அறிவாற்றலால் பணம் சம்பாதிக்கக் கூடிய சூழல்கள் இருக்கும். குபேரரின் ஆசிர்வாதம் இருக்கும். இதனால் பொருளாரத்தில் எந்த குறையும் இருக்காது. குபேரனுடன் லட்சுமியின் அருளும் இருப்பதால் பணம் வரவு இருக்கும்.
-
வைகாசி விசாகம் 2026: முக்கியத்துவம், புராண கதை: வைகாசி விசாக தேதி மற்றும் பூஜைக்கான நேரம் -
பித்ருக்களின் ஆசியைப் பெற வேண்டுமா? சனி அமாவாசையில் தவறவிடக் கூடாத தர்ப்பண முறைகள்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications