அடிச்சான் பாரு அப்பாயின்மெண்ட் ஆர்டர்..இந்த ஒரு விசயத்தை மறக்காம செய்யுங்க..வேலை வீடு தேடி வரும்!
சென்னை: உத்யோகம் புருஷ லட்சணம் என்று சொல்வார்கள். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் இன்றைக்கு அவசியம் நல்ல வேலை தேவைப்படுகிறது. ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து வேலை செய்து சம்பாதித்தால் மட்டுமே இன்றைய கால கட்டத்தில் ஓராளவு வசதியான வாழ்க்கை வாழ முடியும். பொருளாதார தேவைகளை நிறைவு செய்து கொள்ள முடியும். படிப்பு வராதவர்கள் கை தொழில் கற்றுக்கொண்டால் நல்ல தொழில்முனைவோர் ஆகலாம். படித்து விட்டு நல்ல வேலை வேண்டும் என்று இன்று பலரும் காத்திருக்கின்றனர். அதே போல நமக்கு நல்ல தொழில், வியாபாரம் அமையாதா அதற்கு தேவையான பொருளாதார நிதி உதவி கிடைக்காதா என்று பலரும் ஏங்கித்தவிக்கின்றனர். இப்படி பலரது ஏக்கத்தை போக்குகிறது சில பரிகாரங்கள். அதிக செலவில்லாத இந்த பரிகாரத்தை முழு மனதோடு நம்பிக்கையுடன் செய்து வாருங்கள் உங்களின் நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும்.

நமக்கு இயற்கையே கடவுளாக இருக்கிறது. நம் கண் முன் தினமும் காணும் கடவுள் சூரிய பகவான்தான். தினசரி சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்து விட்டு கிழக்கு நோக்கி நின்று சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய பகவான் தந்தை காரகன். அரசு வேலைக்காக முயற்சி செய்பவர் நவ கிரகங்களின் தலைவராக திகழும் சூரிய பகவானை வணங்கினால் நல்ல வேலை நிச்சயம் கிடைக்கும் சூரிய காயத்ரி மந்திரத்தை கூறி வணங்கலாம்.
அடுத்ததாக முழு முதற்கடவுள் விநாயகரை வழிபடுவது நல்லது. சிவப்பு நிற மலர்கள் ரோஜா அல்லது செம்பருத்தி பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட வேண்டும். சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து அந்த நாளில் விநாயகர் கோவிலுக்கு சென்று அகல் விளக்குகள் ஏற்றி வைத்து நல்ல வேலை கிடைக்க வேண்டும் நல்ல தொழில் அமைய வேண்டும் என்று பிராத்தனை செய்யுங்கள் வெற்றிகள் தேடி வரும். முக்கியமாக மாதந்தோறும் உங்களின் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் அரச மரத்தடி விநாயகருக்கு அருகம்புல் வைத்து செம்பருத்தி பூக்கள் மாலை சூட்டி அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபட நினைத்த வேலை கண்டிப்பாக கிடைக்கும்.

அரச மரம் அற்புதமான மரம் உங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும், பகவத் கீதையில் 'மரங்களில் நான் அஸ்வத்தம் என்னும் அரச மரம் என்கிறான் கண்ணன். அரசமரத்தடி விநாயகரை வேண்டிக்கொண்டால் எண்ணிலடங்காத நன்மைகள் நிச்சயம் நிறைவேறும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். முடிந்தால் தினந்தோறும் அரசமரத்தடி விநாயகரை வலம் வந்து வேண்டிக்கொள்ளலாம்.
உங்களின் வேண்டுதலை விநாயகர் நிச்சயம் நிறைவேற்றித்தருவார். இதே போல நல்ல வேலையும், கை நிறைய சம்பளமும் கிடைக்க அரச மரத்தில் இருக்கும் வேருக்கு 43 நாட்கள் தண்ணீர் ஊற்றி வர வேண்டும். அனுமனுக்கு வெற்றிலை மாலையும் வெண்ணெய் சாற்றி சனிக் கிழமைகளில் வழிபட்டு வரவும் நல்ல வேலை அமையும்.
அதே போல எலுமிச்சை தேவ கனி. இதை கையில் வைத்துக்கொண்டு கிழக்கு நோக்கி நின்று உங்களை தலையை 13 முறை சுற்ற வேண்டும். அதை நாற்சந்தி நின்று கையில் உள்ள எலுமிச்சையை 4 துண்டுகளாக வெட்டி நான்கு திசைகளில் வீச வேண்டும். இதே போல கல் உப்பும் எதிர்மறை சக்திகளை விரட்டி நேர்மறை சக்திகளை அதிகரிக்கும். சிறிதளவு கல் உப்பை கையில் வைத்து திருஷ்டி சுற்றி போட்டு விட்டு கை கால்களை கழுவிக்கொள்ளுங்கள்.
பைரவர் வழிபாடு நல்ல வேலை கிடைக்கக் செய்யும். ஞாயிறுக்கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி வழிபட வேலை கிடைக்கும். ஒன்பது வாரங்கள் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். அதன்பின்னர் பைரவருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து பூஜையை நிறைவு செய்ய உங்களுக்கு வேலை கிடைப்பதில் இருக்கும் தடைகள் நீங்கி நல்ல வேலை கிடைக்கும்.
இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் எத்தனையோ பேருக்கு திடீர் என வேலை போய்விடுகிறது. சந்தர்ப்ப சூழ்நிலையால் சிலருக்கு வேலை போகும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அதனாலேயே பலரும் அச்சத்துடன் இருக்கின்றனர். பார்க்கும் வேலை நிரந்தரமாக நிலைக்கவும் இந்த பரிகாரங்களில் ஏதாவது ஒன்றினை நம்பிக்கையுடன் செய்யவும். நல்ல எண்ணங்கள் வெற்றியைத் தரும். இந்த பிரபஞ்ச சக்தியும் இறை சக்தியும் உங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications