இந்த 1 கோயிலில் ராகு கேதுவை வழிபட்டால் 5 கோயிலின் பலனை பெறலாம்..சேஷபுரீஸ்வரர் கோவில் பற்றி தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: எல்லோரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சனிப்பெயர்ச்சி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, ஏப்ரல் 26 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் ராகு கேது பகவானை வழிபட்டால் புகழ்பெற்ற 5 ராகு கேது கோயிலின் பலனைப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா. வாங்க இந்த தொகுப்பில் அதன் முழு விவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கிரகப் பெயர்ச்சி

ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்ச்சியாகும். கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் நிலை மாற்றம் 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, குரு, ராகு கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன.

Rahu ketu peyarchi Thirupampuram Seshapureeswarar Temple

ராகு கேது பெயர்ச்சி எப்போது?

எல்லோரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சனிப்பெயர்ச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மார்ச் 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சியானது வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

ராகு கேது தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள்

சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி போல ராகு கேது பெயர்ச்சியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒருவருடைய ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருந்தால் திருமணம் தடைப்படும். குழந்தை பாக்கியம் தள்ளிப் போகும். தொழிலில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். தோல் சம்பந்தப்பட்ட நோய் ஏற்படும். இந்த தோஷத்திற்குரிய பரிகாரத் தலங்களில் வழிபாடு செய்வதன் மூலமாக அதில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

Rahu ketu peyarchi Thirupampuram Seshapureeswarar Temple

2025 இல் ராகு கேது பெயர்ச்சி பரிகார ராசிகள்

2025 ஆம் ஆண்டின் ராகு கேது பெயர்ச்சியில் ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். இந்த இடப்பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனையும் தரப் போகிறது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய 9 ராசியினர் பரிகார ராசியினராக உள்ளனர்.

பரிகாரத் தலங்கள்

ராகு கேது தோஷ பரிகாரத் தலங்களில் சிறப்பு வாய்ந்த தலங்களாக தமிழகத்தில் திருப்பாம்புரம் கோயில், ஸ்ரீகாளஹஸ்தி, திருமுருகன்பூண்டி, காஞ்சி ஸ்ரீமாகாளீஸ்வரர் கோயில், தேவர்குளம் ஸ்ரீசக்தி விநாயகர், செங்காணி ஸ்ரீகோதபரமேஸ்வரர், திருக்களாச்சேரி போன்ற தலங்கள் உள்ளன. குறிப்பாக, திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலான உள்ள சேஷபுரீஸ்வரர் சுவாமி திருகோயிலில் ராகு கேது பகவானை வழிபட்டால் புகழ்பெற்ற 5 ராகு கேது கோயிலுக்குச் சென்ற பலனைப் பெறலாம் என்று கூறப்படுகிறது. அந்த கோயிலைப் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Rahu ketu peyarchi Thirupampuram Seshapureeswarar Temple

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில்

இந்தியாவில் அமைந்துள்ள மிகப் பழமையான கோயில்களில் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயிலும் ஒன்றாகும். திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருப்பாம்புரத்தில் அமைந்துள்ள இத்தலம் 274 தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் ஒன்றாகும். மூலவர் திருநாமம் ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் அம்பாள் ஸ்ரீ வண்டுசேர் புங்குழலி சுவாமிகளை, ராகுவும் கேதுவும் ஏக சரீரமாக இருந்து இறைவனை பூஜித்து அருள் பெற்றதால் ராகு கேது ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.

தென் காளஹஸ்தி

இத்தலத்திற்கு பாம்புபுரம் தென் காளஹஸ்தி என்ற பெயரும் உண்டு. இந்த தலத்தை வழிப்படுவதால் திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர், கீழ்பெரும்பள்ளம் மற்றும் காளஹஸ்தி ஆகிய ஐந்து திருத்தலத்தை வழிப்பட்ட ஒருமித்த பலன் உண்டு. வருகின்ற சித்திரை மாதம் 13 ஆம் தேதி 26.04.2025 சனிக்கிழமை மாலை 4.20 மணிக்கு இராகு பகவான் மீன இராசியிலிருந்து கும்ப இராசிக்கும், கேது பகவான் கன்னி இராசியிலிருந்து சிம்ம இராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.

ராகு கேது பெயர்ச்சி விழா

ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி 26.04.2025 முதல் 27.04.2025 முடிய இரண்டு தினங்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் ராகு கேது பால் அபிஷேகத்துக்கு ரூ.50, இலட்சார்ச்சனை கட்டணமாக ரூ. 100, ராகு கேது தோஷ பரிகார ஹோம கட்டணமாக ரூ. 500, சிறப்பு ராகு கேது தோஷ பரிகார பூஜை கட்டணமாக ரூ. 500, கட்டளை அர்ச்சனை 18 மாதங்களுக்கு ரூ. 1800, பக்தர்கள் குறிப்பிடும் நாளில் ராகு கேது அபிஷேகம் செய்ய ரூ. 2000 வசூலிக்கப்படுகிறது.

Rahu ketu peyarchi Thirupampuram Seshapureeswarar Temple

வழிதடங்கள் விவரம்

கும்பகோணம் (to) காரைக்கால் வழித்தடம், கற்கத்தி வழியாக திருப்பாம்புரம்

மயிலாடுதுறை (to) கொல்லுமாங்குடி கற்கத்தி வழியாக திருப்பாம்புரம்

திருவாரூர் (to) சன்னாநல்லூர், பேரளம் வழியாக திருப்பாம்புரம்

காரைக்கால் (to) பேரளம் வழி கற்கத்தி வழியாக திருப்பாம்புரம்

தொடர்புக்கு: திருக்கோயில் தொலைபேசி எண் - 87547 56418

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+