அட்சய திருதியை 2024: மே 10 ஆம் தேதி தங்கம் வாங்க நல்ல நேரம் எப்போது? வேறு என்னவெல்லாம் வாங்கலாம்?
சென்னை: அட்சய திருதியைக்கு எந்த நேரத்தில் தங்கம் வாங்குவது என்பதை தெரிந்து கொண்டு வாங்குங்கள்.
அட்சய திருதியை அன்று தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கினால் அந்த பொருள் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். இருக்கப்பட்டவர்கள் தங்கம் வாங்குவர். இல்லாதவர்கள், தங்களால் இயன்ற பொருளை வாங்கலாம்.

பலர் நிலம், வீடு, கார் உள்ளிட்டவைகளை வாங்குவது வழக்கம். அது போல் சிலர் கல் உப்பை கூட வாங்கி வைப்பர். இதுவும் லட்சுமி கடாட்சம்தான். அந்த வகையில் அட்சய திருதியை என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திதியே அட்சய திருதியை என அழைக்கப்படுகிறது. அட்சயம் என்றால் பொருள் வளரும் என்பது ஐதீகம். இந்த நாளில் தங்கம் வாங்கினால் தங்கும் என்பார்கள். ஆனால் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் எல்லோராலும் தங்கம் வாங்க முடியாது.
இதற்காக உப்பு, அரிசி, ஆடைகள், சிறிய பாத்திரம் உள்ளிட்டவைகளில் எது வேண்டுமானாலும் வாங்கலாம். அது போல் பெண் பார்க்க செல்வது, நிச்சயதார்த்தம் போன்ற சுபகாரியங்களை இந்த நாளில் செய்வது நல்லது. அட்சய திருதியை அன்று தானம் கொடுப்பதும் நல்லது.
ஆடை எனப்படும் வஸ்திர தானமாக இருக்கலாம். அன்னதானம் கொடுப்பதும் சிறப்புதான். இத்தனை சிறப்புகளை கொண்ட அட்சய திருதியை இன்றைய ஆண்டு மே 10 ஆம் தேதி அதிகாலை 4.17 மணி முதல் மறுநாள் அதிகாலை 2.50 மணி வரை தொடர்கிறது. அட்சய திருதியை நாளில் சுப முகூர்த்தம் காலை 5.33 முதல் 7.14 வரை இருக்கும்.
அமிர்த முகூர்த்தம் காலை 8:56 முதல் 10:37 வரையும் மதியம் 12.18 மணி முதல் 1.59 மணி வரையும் சுபமுகூர்த்தம் உள்ளன. அதேபோல், மாலை 5.21 மணி முதல் இரவு 7.02 மணி வரை சிறிய முகூர்த்தங்கள் உள்ளன. இந்த நேரங்களில் தங்கம் உள்ளிட்ட பொருட்களை வாங்கலாம்.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications