கார்த்திகை தீப திருவிழா.. லட்ச தீபத்தில் ஜொலிக்கப்போகும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை தீபதினத்திருநாளன்று மாலையில், கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் சித்திரை திருவிழா சிறப்பானது. பல லட்சம் பக்தர்கள் மதுரையில் திரள்வார்கள். ஆவணி மூல திருவிழா, மாசி திருவிழா என ஆண்டின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா வருகிற 1 ஆம் தேதி தொடங்கி 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று காலை 10.30 மணியில் இருந்து 10.54 மணிக்குள் சுவாமி சன்னதி முன்புள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியுள்ளது.
தொடர்ந்து 10 நாட்களும் மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் காலை மாலை பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் தீப திருவிழா நடைபெறும் 6ஆம் தேதி திருக்கோவில் முழுவதிலும் லட்ச தீபம் ஏற்றப்படும்.
பெரியகார்த்திகை நாளில் மாலை 6 மணிக்கு பொற்றாமரைகுளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, பிரகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் லட்ச தீபம் ஏற்றப்படும். மீனாட்சி, சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார்கள். பின்னர் அவர்கள் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடாகி கிழக்கு சித்திரை வீதியில் அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி முன்பு எழுந்தருளுவார்கள் அங்கு இரவு 7 மணிக்கு சொக்கப்பனை தீபம் ஏற்றப்பபடும்.
ஆலயங்களில் தினந்தோறும் தீபம் ஏற்றப்பட்டாலும் கார்த்திகைப் பௌர்ணமியில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சில ஆலயங்களில் லட்ச தீபம் எனும் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஒரு லட்சம் அகல்கள் ஏற்றப்பட்டு ஆலய மதில்கள் பிராகாரங்கள், கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள் முதலிய இடங்களில் வைக்கப்படுகின்றன.
ஆலய பிரகாரத்தில் தாமரை, சிவலிங்கம் முதலிய வடிவங்கள் கோலங்களாக வரையப்பட்டு அதன்மீது வரிசையாக தீபங்கள் வைக்கப்படுவது வழக்கம். தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன. திருக்குளங்களின் படிகட்டுகளிலும் வரிசை வரிசையாக தீபங்களை ஏற்றுகின்றனர். எண்ணற்ற தீபங்களின் ஒளியில் ஆலயம் பிரகாசமாக ஒளிர்வது கண்கொள்ளக் காட்சியாகும்.
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் பொற்றாமரைக்குளக்கரையை சுற்றிலும் லட்ச தீபம் ஏற்றப்படும். மயிலாப்பூரில் ஆண்டுதோறும் லட்சதீபப் பெருவிழா கொண்டாடப்படுகிறது. திருக்கழுக்குன்றம் வேதகிரீசர், திரிபுரசுந்தரி ஆலயங்களில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்சதீபம் ஏற்றப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications