மகர ராசிக்கு யோகம்.. அரசு வேலை கிடைக்குமா? விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கடனில்லா வாழ்வு அமையுமா?
சென்னை: இன்றைய பொருளாதார சூழ்நிலையில், மாதச்சம்பளம் போதுமானதாக இருப்பதில்லை.. வீட்டுக் கடன், விவசாயக் கடன், கல்விக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், நகைக்கடன் என பல வகையான கடன்களுக்கு மனிதர்கள் ஆளாக நேரிடுகிறது. கழுத்தை நெரிக்கும் கடனிலிருந்து விடுபட முடியாமல் பலரும் தவிக்கிறார்கள்.. கடனற்ற வாழ்க்கை எந்த நட்சத்திரக்காரர்களுக்கு அமையும்? எந்த ராசிக்காரர்களுக்கு அரசு வேலை அமையும்? என்பது குறித்து ஜோதிட வல்லுநர்கள் கணித்து வைத்துள்ளனர். அதில் சிலவற்றை பார்ப்போம்.
மேஷம் ராசிக்காரர்களை எடுத்துக் கொண்டால், திட்டமிட்டு சேமிப்பது இவர்களுக்கு சிரமம்.. அதிக நெருக்கடிகளுக்கு தயாராக இருப்பார்கள். எனினும், கடனை எளிதில் வசூலிப்பார்கள். எனினும், பெரிய கடனில் இவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

ரிஷபம், கடகம்
ரிஷப ராசிக்கார்கள் சிக்கனம் உணர்ந்தவர்கள், அதேசமயம், தன்னிச்சையாக அளவுக்கு அதிகமாக பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டால், அது அவர்களின் நிதி நிலையை பாதித்துவிடுமாம். அதேபோல, மிதுன ராசிக்காரர்கள், பணத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள் என்பதால்,சொத்துக்களை சேர்க்க முடிவதில்லை. எனவே, நீண்டகால முதலீடுகளையும் பொறுப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாம்.
கடக ராசிக்காரர்கள் பண விஷயத்தில் படு உஷாராக இருப்பவர்கள், எனினும், தங்களுடைய சேமிப்புகளையே நம்பியிருப்பது நல்லது என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள், ஆடம்பரத்தில் ஆர்வம் கொண்டவர்கள். எனவே பணத்தை சேமிப்பது கடினமான ஒன்று... கன்னி ராசிக்காரர்கள் பண விஷயம், முதலீட்டில் சிக்கனமாக இருப்பதால், சேமிப்பும் எளிதாக கைகொடுக்கும். துலாம் ராசிக்காரர்கள் நிதி விஷயத்தில் சற்று மந்தமாகவே இருப்பார்கள், செலவும் அதிகமாக செய்துவிடுவார்கள். எனவே இவர்கள், திட்டம் தீட்டி பணத்தை செலவு செய்ய வேண்டும்.
விருச்சிக ராசிக்காரர்கள் சபாஷ்
விருச்சிக ராசிக்காரர்கள் பண விவகாரங்களில் ரகசியத்தை காப்பார்கள்.. முதலீடு மற்றும் செலவுகளில் சரியான முடிவுகளை எடுப்பார்கள்.. நிதியையும் திறம்பட நிர்வகிப்பார்கள்.
தனுசு ராசிக்காரர்களின் நேர்மறை சிந்தனை, நிதி சார்ந்த விஷயங்களில் பொறுப்பில்லாமல் ஆக்கக் கூடும். அதேசமயம், செலவாளிகளாகவும் இருப்பார்கள். மகர ராசிக்காரர்கள் நிதிக் கொள்கையில் மிகவும் ஒழுக்கமானவர்கள் என்பதால் ஷேர் மார்க்கெட்டில்கூட முதலீடு செய்யலாம்.
கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் முதலீட்டு மற்றும் சேமிப்பு முடிவுகளை எடுக்க முடியாதவர்கள் என்பதால், நிதி பாதுகாப்பை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும்,. மீன ராசிக்காரர்கள் பண நிர்வாகத்தில் எளிதில் தவறாக வழிநடத்தப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அரசு வேலை யார் யாருக்கு?
அதேபோல அரசு வேலை கிடைக்க வேண்டுமானால், 1 ம் எண்ணுக்குரிய அதாவது உங்களின் பிறந்த தேதி 1,10,19, 28 என்று இருந்தால் நிறைய வாய்ப்பு உள்ளது.. 1,10,19,28 போன்ற தேதிகளில் விடியற்காலை முதல் மதியம் வரை பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
வியாழன் கிரகத்திற்கு உகந்த எண்ணாக 3 உள்ளதால், பிறந்த தேதி 3, 12, 21 போன்ற தேதிகளில் விடியற்காலை முதல் மதியம் வரை பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது...
எந்தெந்த ராசிக்கு அரசு வேலை
சனி கிரகத்திற்கு உகந்த எண்ணாக 8 உள்ளதால், 8,17, 26 போன்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கு, விடியற்காலை முதல் மதியம் வரை பிறந்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாம். அதேபோல, செவ்வாயின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலோ, அல்லது ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனின் அமைப்பு நல்லபடியாக இருந்தாலோ அவருக்கு அரசு வேலை கிடைக்கும்.
அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம்,விருச்சிகம் போன்ற ராசிக்காரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் யோகம் உள்ளதாக கூறப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications