Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஹாளய அமாவாசை.. இந்த நாளில் மறக்காமல் தானம் கொடுங்கள்.. முன்னோர்கள் ஆசி நிச்சயம் கிடைக்கும்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மகாளய அமாவாசை தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்கள். முக்கியமாக தானம் செய்யுங்கள். இதன் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு சுபகாரியத்தடைகளும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். இந்த ஆண்டு மகாளய அமாவாசை ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. தர்ப்பணம் அளித்து வழிபட்டால் சூரியபகவானின் ஆசியும் நம்முடைய முன்னோர்கள் ஆசியும் நிச்சயம் கிடைக்கும்.

இந்த பூவுலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொரும் தான் உயிருடன் இருக்கும் போது ஆற்ற வேண்டிய கடமைகள் என்று சிலவற்றை முன்னோர்கள் வலியுறுத்திச் சென்றுள்ளார்கள். அதிலும் குறிப்பாக இந்துவாகப் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் செய்யவேண்டிய கடமைகள் என்னென்ன என்று வேதங்களும், ஆகமங்களும், புராண, இதிகாசங்களும் குறிப்பிட்டு சொல்லியுள்ளன. அவை கடமை என்பதை விட கடன் என்று தான் ஆகமங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றன.

இந்துவான ஒருவர் தான் ஆற்றவேண்டிய அல்லது தீர்க்க வேண்டிய கடன்களில் முக்கியமாக ரிஷி கடன், மூதாதையர் கடன், தேவ கடன் என மூன்று கடன்களை குறிப்பிட்டுள்ளனர். இம்மூன்றில் மற்ற இரண்டையும் விட மிகவும் முக்கியமானது மூதாதையர் கடன் எனப்படும் பித்ரு கடனாகும்.

பித்ரு கடன்

பித்ரு கடன்

ரிஷி கடன் மற்றும் தேவ கடன் என இரண்டையும் எப்போது வேண்டுமானாலும் நாம் தீர்த்துக்கொள்ள முடியும். அதற்கு மாறாக பித்ரு கடனை மட்டும் நாம் சில குறிப்பிட்ட கால கட்டத்திற்குள் செய்து முடிக்க வேண்டியது அவசியமாகும். அப்படி செய்ய முடியாவிட்டால், அந்தப் பாவமும், கடனும் விடாமல் நாம் எத்தனை பிறவிகள் எடுத்தாலும், நம்மை துரத்திக் கொண்டே வரும். பித்ரு கடனை தீர்க்காவிட்டால், நாம் நம் வாழ்வில் முன்னேற்றம் என்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.

பித்ரு கடன்

பித்ரு கடன்

பித்ரு கடனை ஒருவர் நிறைவேற்றாமல், அவர் எத்தனை தான தர்மங்கள் செய்தாலும், எந்தக் கோயிலுக்குச் சென்று எந்த பரிகாரம் செய்தாலும், ஏன் அந்த கடவுளே அவருக்கு செல்வத்தை கொட்டிக் கொடுக்க நினைத்தாலும், அவர் தன்னுடைய பித்ரு கடனை நிறைவேற்றாமல் இருந்தால், அவருடைய மூதாதையர்கள் வந்து தடுத்து விடுவார்கள். அதனாலேயே ஒருவருடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால், முதலில் அதை நிவர்த்தி செய்துவிட்டு மற்றபிற காரியங்களை செய்யச் சொல்வார்கள். காரணம் பித்ரு தோஷத்தின் மகிமை அப்படி.

 பித்ரு தோஷநிவர்த்தி

பித்ரு தோஷநிவர்த்தி

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு பித்ரு தோஷ நிவர்த்தியை எந்த நாளில் செய்வது என்று குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். பித்ரு தோஷ நிவர்த்திக்கு என்று மூன்று நாட்களை ஆகமங்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளன. அதில், இறந்த நாள், அமாவாசை மற்றும் வருடப்பிறப்பு என மூன்று நாட்களை உகந்தாக சொல்லியுள்ளன. அதிலும் குறிப்பாக ஆவணி மாத பௌர்ணமி முடிந்து மறுநாள் முதல் புரட்டாசி மாத அமாவாசை தினம் வரை உள்ள பதினான்கு நாட்களான மஹாளய பட்ஷ நாட்களிலும், மஹாளய அமாவாசை நாளிலும் செய்வது மிகவும் பயனளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளன.

 மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

இந்த மஹாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்தது. இதனால் அவர்களின் ஆசி நமக்கு கிடைத்து வாழ்க்கை வளம்பெறும். அதோடு ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு அல்லது தீபத்தை பார்த்து வணங்குவது மிகவும் நல்லது. உங்களின் முன்னோர்களை நினைத்து வழிபடுவதும், கடவுளிடம் பிரார்த்திப்பதும் உங்களுக்கு மன நிம்மதியையும், ஆசீர்வாதமும் கிடைக்கும்.

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசை தினத்தில் பித்ரு காரியத்தை செய்யச் சொன்னதற்கு முக்கிய காரணம், மறைந்த நம் முன்னோர்கள் ஜனோ லோகம் என்னும் பித்ரு லோகத்தில் இருந்து எமதர்மனிடம் இருந்து அனுமதி பெற்றுக்கொண்டு, நம்மைக் காண இந்த பூமிக்கு வருவார்கள். அவர்கள் இங்கு மஹாளய பட்ஷம் முதல் தை அமாவாசை வரை என நான்கு மாத காலம் இங்கு தங்கியிருந்து நாம் செய்யும் பித்ரு காரியத்தை மிகவும் மன நிறைவுடன் ஏற்றுக்கொண்டு, நம்மையும் நம் சந்ததியினரையும் மிக்க மகிழ்ச்சியோடு ஆசீர்வதித்துவிட்டு, தை அமாவாசை நாளில் மீண்டும் பித்ரு லோகத்திற்கு திரும்பச் செல்வார்கள்.

முன்னோர்கள் ஆசி

முன்னோர்கள் ஆசி

மஹாளய பட்சம் நாட்களில், நம் முன்னோர்களின் ஆன்மா எனப்படும் காகத்திற்கும், மற்ற ஜீவ ராசிகளான பசு, நாய், பூனை, எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகளுக்கும் உணவளித்து நம்முடைய பித்ரு கடனை தீர்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமையாகும். அதோடு, ஏழை எளியவர்களுக்கு நம்மாள் முடிந்த மட்டும், கருப்பு எள், கருப்பு உளுந்து, உப்பு, வெல்லம், துணிமணிகள் போன்றவற்றையும் தானமாக அளித்தால், நம் முன்னோர்களும், இறைவனும் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பார்கள்.

பித்ரு கடன் தீர்க்கலாம்

பித்ரு கடன் தீர்க்கலாம்

மஹாளய பட்சம் செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கியுள்ளது. தினசரியும் தர்ப்பணம் அளித்து வழிபட்டு வருகின்றனர். செப்டம்பர் 25ஆம் தேதி மஹாளய அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. நாமும், நம் சந்ததியினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நம் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடனை முழு மனத் திருப்தியோடு செய்து, வாழ்வில் முன்னேற்றம் காணவேண்டியது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+