சமையலறையில் இந்த பொருளை உடனே வெளியே எடுத்துருங்க.. இது இருந்தாலே பணம் வராது.. சூப்பர் வாஸ்து டிப்ஸ்
சென்னை: வீட்டிலுள்ள பொருட்களை சரியான முறையில் வைத்திருந்தாலே, நமக்கு பாதி பிரச்சனை வராது என்கிறார்கள்.. அந்தவகையில சமையலறையில் என்ன இருக்க வேண்டும்? என்ன வைத்திருக்கக்கூடாது என்பது குறித்தும் வாஸ்து சாஸ்திரத்திலும் விரிவாகவே சொல்லப்பட்டுள்ளது. அதனை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
வீடுகளில் உள்ள ஒவ்வொரு அறைகளின் திசையும் முக்கியமானவை.. அந்தவகையில் சமையலறையிலுள்ள ஜன்னல் முதல் சமையல் மேடையில் வைத்திருக்கும் பாத்திரங்கள், கேஸ் வைக்கும் மேடை என ஒவ்வொன்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

சமையலறை: சமையலறை எந்த அளவுக்கு அகலமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு பண வரவு இருக்கும் என்பார்கள்.. எப்போதுமே கிச்சனில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்..
எப்போதுமே, வடக்கு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு திசைகளை சமையலறை வைப்பதை தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவை வாஸ்துபடி சமையலறை திசைக்கு உகந்ததாக கருதப்படுவதில்லை... எனவே, தென்கிழக்கு மூலையில், தெற்கு கிழக்கு சுவரை ஒட்டித்தான் அமைக்க வேண்டுமாம். ஏனென்றால், அப்போதுதான், சூரிய ஒளிக்கதிர்கள் கிச்சனுக்குள் நேராக வரும்.. இதற்கேற்றபடியே ஜன்னலையும் அமைக்க வேண்டும்..
குளியலறை: வாஸ்து குறைபாடாக கருதப்படுவதால் குளியலறையையும் சமையலறையையும் ஒன்றாக வைப்பதைத் தவிர்க்கவும். சமையலறையில் நுழைவதற்கு ஒரே ஒரு திசை மட்டுமே இருக்க வேண்டும் மற்றும் எதிரெதிராக இரண்டு கதவுகளை ஒருபோதும் கட்டக்கூடாது. 2 கதவுகள் இருந்தால், வடக்கு அல்லது மேற்கு நோக்கிய கதவு திறந்திருக்க வேண்டும், இன்னொன்று எதிர் திசையில் வைக்கப்பட வேண்டும்.
சமையல் செய்யும்போது, கிழக்கு நோக்கியே நின்று சமைக்க வேண்டும்.. பாத்திரம் கழுவும் குழாய், வடகிழக்கில் மூலையில் இருக்க வேண்டும். ஒருவேளை இந்த இடம் மாறியிருந்தால், பெண்களுக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு வரலாம். உப்பு எப்போதுமே நம்முடைய வலது கை பக்கத்தில்தான் வைக்க வேண்டும்.
மின்சாத பொருட்கள்: அதேபோல, சில பொருட்கள் கிச்சனுக்குள் இருந்தால், அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும்.. குறிப்பாக கிச்சனில் மருந்து பொருட்களை வைக்கக்கூடாதாம். எப்போதுமே பாத்திரங்களை கழுவாமல் அப்படியே சிங்கில் போட்டு வைத்திருக்க கூடாது. இது குடும்ப வறுமையை அதிகப்படுத்திவிடும். அதேபோல, பயன்படுத்தப்படாத பாத்திரங்கள், உடைந்த பாத்திரங்களையும், நெளிந்த, விரிசலடைந்த பாத்திரங்களையும் கிச்சனில் வைத்திருக்கக்கூடாது.. மேலும், அழுகிய துர்நாற்றம் வீசும் பொருட்களையும் வைத்திருக்க கூடாது.
மாவு பிசைந்து மீதமாகிவிட்டால், அதனை ஃபிரிட்ஜில்கூட வைக்கக்கூடாதாம். இது ராகு, சனியின் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.. எனவே, தேவையான அளவுக்கு மட்டுமே மாவு பிசைய வேண்டும். கத்திகள் போன்ற கூர்மையான பொருட்களை தொங்கவிடாதீர்கள்.. இது தீய ஆற்றலை தந்துவிடுமாம்.. சிலர் கிச்சனில் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இது தவறானது.. வீட்டிற்குள் அதிகமான எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துவதுடன், மனஅமைதியும் குடும்பத்தில் கொண்டுவந்துவிடும்.
தண்ணீர் கசிவு: குழாயில் தண்ணீர் கசிவு இருக்கக்கூடாது.. எந்த அளவுக்கு தண்ணீர் வீணாகிறதோ, அது பணம் விரயமாவதற்கு சமம்.. எனவே உடைந்த பைப் இருந்தாலும், உடனே சரிசெய்துவிட வேண்டும்..
அதேபோல, தெற்கு அல்லது மேற்கு மூலையில் உள்ள அலமாரியில், உபயோகப்படுத்தும் பாத்திரங்களையும் வைத்து கொள்ளலாம். கிச்சன் மின்சாதனங்களும் தென்கிழக்கு மூலையில் வைக்கப்பட வேண்டும் ..
சிறந்த நிறம்: எப்போதுமே கிச்சனை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மஞ்சள் நிறம் கிச்சனுக்கு சிறந்தது என்கிறார்கள்.. சிவப்பு, வெளிர் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, பச்சை போன்ற வண்ணங்களையும் வாஸ்து படி சமையலறை வண்ணங்களாகப் பயன்படுத்தலாம். அதேபோல, கிச்சனில் எப்போதுமே புத்தம்புதிதாக மலர்ந்த பூக்களை வைக்கலாம்.. அதேபோல, செடிகள், பழங்கள், காய்கறிகள் என புதிதாக வைக்கலாம்..
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications