மாசி மாத பூஜை..சபரிமலை ஐயப்பன் கோவில் நடை பிப்.12ல் திறப்பு..ஆன்லைன் புக்கிங் ஆரம்பம்
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது.
சபரிமலை: மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்குப் பிறகு அடைக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 12 ஆம் தேதி மாசி மாத பூஜைக்காக திறக்கப்படுகிறது. கும்பம் மாத பூஜைக்காக 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்பட்டு 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12 ஆம் தேதி மாலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் முதல் 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். எனவே அதற்கு முன்னதாகவே காணிக்கை நாணயங்களை எண்ணி முடிப்பதற்கு திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிரம் காட்டியுள்ளனர்.
சபரிமலையில் 2022-2023ஆம் ஆண்டுக்கான மண்டல மகரவிளக்கு சீசன் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி நிறைவடைந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டதால் தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடந்த சீசனில் 50 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன்மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.380 கோடி வருமானம் கிடைத்தது.

ஆனால் சன்னிதானத்தை சுற்றி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருந்த காணிக்கை பெட்டிகளில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் குறிப்பாக நாணயங்கள் இன்னும் எண்ணி கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளது. அந்த நாணயங்களை எண்ணுவதற்காக, தேவஸ்தானத்தின் சார்பில் 540 ஊழியர்கள் கொண்ட குழு சன்னிதானம் சென்றனர்.
அவர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியை தொடங்கி உள்ளனர். ரூ.18 கோடி அளவிற்கு காணிக்கை பணம் குவிக்கப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டு உள்ளது. மாசி மாத பூஜைக்காக நடை திறப்பதற்கு முன்னதாகவே காணிக்கையாக கிடைத்த நாணயங்களை எண்ணி முடிக்க திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் பிப்ரவரி 12 ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கோவில் நடை திறக்கப்படும். அன்று பூஜைகள் ஏதும் நடத்தப்படாது. மீண்டும் கோவில் நடை அடைக்கப்பட்டு, பிப்ரவரி 13 ம் தேதி காலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 5 மணிக்கு பிறகே பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள். இந்த நாட்களில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பிப்ரவரி 17 ம் தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும்.
13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 5 மணிக்கு நெய் அபிஷேகத்தில் தொடங்கி இரவு வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்படும். 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். 17 ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர். ஆன்லைன் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல்லில் உடனடி புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications