வாஸ்து டிப்ஸ்...தாறுமாறாக செல்வம் வர..இந்த திசையில் மீன்களை வளர்க்கலாம்..குடும்ப ஒற்றுமை கூடும்
சென்னை: வீட்டில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செல்வ வளத்தோடும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் வீடுகளில் செல்லப்பிராணிகளை வளர்ப்பார்கள். சிலரோ சின்னதாகவோ, பெரியதாகவோ மீன் தொட்டி வளர்ப்பார்கள். மீன்கள் தீய அதிர்வுகளை தனக்குள் இழுத்துக்கொண்டு நல்ல அதிர்வுகளை வெளியேற்றும். மீன் தொட்டியை நம்முடைய வீட்டில் சரியான திசையில் வைத்து மீன்களை வளர்ப்பதன் மூலம் மன அமைதி உண்டாகும். பணம் பல வழிகளில் இருந்தும் தாறுமாறாக வரும்.
வாஸ்துவில் திசைகள் என்பது மிக மிக முக்கியமானது. மீன் தொட்டி வீடடை அலங்கரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. தொட்டிக்குள் மீன்கள் நீந்துவதை பார்க்கும் போது மனதிற்கு ஒரு இதமான உற்சாகத்தை தருகிறது. மீன்களுக்கு உணவிடும் போது நம் கர்மாவை கழிப்பதோடு மன அமைதியை அளிக்கிறது.

நன்கு ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக மற்றும் சுட்டித்தனமாக இருக்கும் மீன்களை தொட்டியில் வளர்த்தால், அது வீட்டினுள் செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். மீன் தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ஃபெங் சூயி சாஸ்திரப்படி படி, மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்களாவது இருக்க வேண்டும். அதற்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.
மீன் தொட்டியில் உள்ள மீன்களின் நிறமும் முக்கியமானது. அதில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.
மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும். ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம். ஒருவேளை மீன் இறந்துவிட்டால், அதை நீக்கிவிட்டு, அதே நிறத்தில் மற்றொரு மீனை தவறாமல் வாங்கிப் போடுங்கள்.
டிராகன் மீன் வாஸ்து மீன்களில் முதன்மையானது மற்றும் வாஸ்து மீன் தொட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான மீனாகும். வாஸ்து மீன்களிலேயே மிகவும் விரும்பப்படும் மீனாகும். இதை வீட்டில் வளர்த்தால் அதிகாரம், வளமை, மகிழ்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் தருக் கூடிய ஆற்றல் உள்ளது. இது மற்ற மீன்களை விட அதிக விலை கொண்டது.
தங்க நிற மீன்களை வளர்க்கலாம். இது விலையும் குறைவு; அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படும் மீனாகும். இந்த வாஸ்து மீன் அழகாக இருப்பதோடு வீட்டில் அமைதியையும் குடும்பத்தில் ஒற்றுமையையும் ஏற்படுத்தும். தொட்டியில் வளரும் தங்க மீன்களை பார்க்கும் போதே மனக் கவலைகள் பறந்து போகும்; மனதில் அமைதி பிறக்கும்.
மீன் தொட்டியில் வளர்க்கப்படும் மீன்கள் எதிர்மறை ஆற்றலை நீக்கி விட்டு நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். தொட்டியில் உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும் மீன்கள் அபரிமிதமான செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், வீட்டிற்குள் செழிப்பையும் கொண்டுவரும்.
மீன் தொட்டியில் பசியோடு உள்ள மீன்களுக்கு உணவு கொடுப்பதன் மூலம் உங்களுக்கும் புண்ணியம் கிடைக்கும். கர்ம வினைகள் நீங்கும்.
உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால் அது தொடர்பான திசையில் மீன் தொட்டி வைத்தால் அந்த பிரச்சனை விலகும். வீட்டில் மீன் தொட்டியை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பதே மிகவும் சிறந்தது. வாஸ்துவின் படி, இப்படி வைப்பதால், குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும்.வீட்டினுள் நுழையும் போது, மீன் தொட்டி எப்போதும் இடது பக்கத்தில் இருப்பதே நல்லது.
மீன் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைத்தால், அது அளவுக்கு அதிகமாக கண்டதை பற்றி சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும். மீன் தொட்டியை எந்த சூழ்நிலையிலும் சமையலறையில் மட்டும் வளர்க்கக் கூடாது. படுக்கை அறையில் மீன் தொட்டியை வைத்திருக்கக்கூடாது. இதனால் வீட்டில் பண இழப்பு தான் ஏற்படும். மன அமைதியும் குறையுமாம். எனவே சரியான திசையில் மீன் தொட்டியை வைத்து வளர்க்க செல்வ வளமும் மன அமைதியும் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications